பெங்களூரு: புகழ்பெற்ற ஆப்டிகல் நிறுவனமான ஜெர்மனியை சேர்ந்த Zeiss தன்னுடைய முதல் பன்னாட்டு கிளையை பெங்களூருவில் நிறுவி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாக Zeiss நிறுவனம் கூறியுள்ளது.
ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டு Zeiss நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கண் கண்ணாடி சம்பந்தப்பட்ட துறையில் உலகிலேயே முன்னணி நிறுவனமாக இருக்கிறது. தற்போது பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் gcc மையத்தில் 600 பேர் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2028 ஆம் ஆண்டில் இந்த ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என தெரிகிறது. தற்போது பெங்களூருவில் 43 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் Zeiss நிறுவனம் ஜிசிசி மையத்தை அமைத்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய இன் சோர்ஸ் ஐடி சேவைகளுக்காகவும் மற்ற தொழில் செயல்பாடுகளுக்காகவும் வெளிநாடுகளில் தங்களுடைய கிளைகளை நிறுவுவதே ஜிசிசி மையங்கள் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் Zeiss இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான தாவல் ராடியா, தற்போது தங்களுடைய நிறுவனம் டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு தயாராகி வருவதாகவும் சர்வதேச அளவில் தங்களுடைய நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவில் அதற்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதி இங்கே அலுவலகத்தை நிறுவி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான ஜிசிசி மையங்கள் செயல்படும் ஒரு நகரமாக பெங்களூர் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 1600 ஜிசிசி மையங்களில் 570 ஜிசிசி மையங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. மொத்தமாக 5.5 லட்சம் பேர் இதில் பணி புரிகின்றனர்.
தற்போது மருத்துவத் தொழில்நுட்பங்கள், விஷன் கேர், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு ,கிளவுட், டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் ஆகிய பிரிவுகளில் Zeiss நிறுவனம் தங்களுடைய ஜிசிசி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு இணைக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் ஸ்மார்ட் ஆப்டிகல் கருவிகள் ஆகியவற்றில் இந்த ஜிசிசி மையம் கவனம் செலுத்தும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பிரிவு நல்ல வளர்ச்சி அடையும் என்றும் Zeiss நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கிராமப்புற பகுதியில் கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்காக Zeiss இந்தியா நிறுவனம் கர்நாடக அரசோடு இணைந்து அலோக்கா விஷன் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications