ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் பாதுகாப்புத் துறைக்கு தேவையான நவீன ரோபோவை உருவாக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி என்பது 1.27 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பல்வேறு நிறுவனங்களும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான நவீன ஆயுதங்களையும் தளவாட பொருட்களையும் தயாரித்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜென் டெக்னாலஜிஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய அதிநவீன ரோபோட் ஒன்றை தயாரித்துள்ளது.
ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏற்கனவே ஆன்டி ட்ரோன் டெக்னாலஜி மற்றும் டிஃபன்ஸ் சொல்யூஷன் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பொருட்களை அறிமுகம் செய்துள்ளது .அந்த வகையில் தற்போது இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்க கூடிய இந்த நான்கு கால்கள் கொண்ட நவீன ரோபோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

LiDAR (light detection and ranging) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் நான்கு கால்கள் கொண்ட இந்த ரோபோவுக்கு பிரஹஸ்தா (Prahasta) என பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோ மனிதர்களால் எளிதில் சென்றுவர முடியாத இடங்களுக்குக் கூட சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என ஜென் டெக்னாலஜிஸ் தெரிவிக்கிறது. இந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலனாக இந்த பிரஹஸ்தா செயல்படும் என்றும் குறிப்பாக இது எளிதாக மாடிப்படிகளில் ஏறும் என்றும் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது இதனை எளிதாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும் என தெரிவிக்கிறது. சிறிய துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்ஸ் ஆகியவற்றை எடுத்து கொண்டு செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 கிலோ எடை கொண்ட ஒரு ராணுவ வீரரை கூட தூக்கிக்கொண்டு இதனால் செல்ல முடியும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
பிரஹஸ்தாவின் செயல்பாடுகளை விளக்கி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் சிறிய துப்பாக்கியை ஏந்தி கொண்டு இலகுவாக மாடிப்படி ஏறி செல்வது மற்றும் தாவி செல்வது உள்ளிட்டவற்றை இந்த ரோபோ செய்கிறது. கீழே விழுந்தாலும் இதுவே தானாக மீண்டு வந்து தன்னுடைய வேலைகளை செய்யும் என்று ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து ஜூலை 15ஆம் தேதி இந்நிறுவனத்தின் பங்கு 1360 ரூபாய் என 5% உயர்ந்து அப்பர் சர்கியூட் நிலைக்கு சென்றது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications