இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவை பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக செப்டோ இருக்கிறது. பால், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை நாம் செப்டோ வாயிலாக ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் பெற முடியும்.
செப்டோ மளிகை பொருட்கள் மட்டுமில்லாமல் மின்னணு சாதனங்களையும் டெலிவரி செய்கிறது. அண்மையில் செப்டோ நிறுவனம் செப்டோ கஃபே என்ற புதிய சேவையை கொண்டு வந்தது. இதில் டீ, காஃபி, சமோசா, பீட்சா உள்ளிட்ட பானங்கள் மற்றும் திண்பண்டங்களை ஆர்டர் செய்ய முடியும். இந்நிலையில் இந்தியாவின் சில பகுதிகளில் திடீரென செப்டோ கஃபே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஏழு வட இந்திய நகரங்களில் பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தன்னுடைய செப்டோ கஃபே சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. செப்டோ கஃபே என்ற பெயரில் திண்பண்டங்கள் , டீ உள்ளிட்டவற்றை டெலிவரி செய்கிறது செப்டோ நிறுவனம். வழக்கமாக நாம் உண்ணக்கூடிய உணவுகளை தவிர்த்து திண்பண்ட வகைகளை மட்டுமே இந்த பிரிவில் நாம் ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம்.
நகர் பகுதிகளில் செப்டோ கஃபே சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சூழலில் செப்டோ நிறுவனம் தன்னுடைய செப்டோ கஃபே சேவையை ஏழு வட இந்திய நகரங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது . செப்டோ கஃபேவுக்காக மொத்தமாக ஆயிரம் இடங்களில் கிடங்குகளை அமைத்தது செப்டோ. இதில் 44 கடைகளில் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, மீரட், ஹரித்வார், கொரக்பூர், மொஹாலி, அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக செப்டோ கஃபே சேவை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூலை செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் மீண்டும் இந்த 44 கடைகளும் செயல்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மணி கண்ட்ரோல் வெளியிடக்கூடிய செய்தி குறிப்பிடுகிறது.
அண்மையில் செப்டோ தலைமை செயல் அதிகாரி ஆதித் பலிச்சா செப்டோ கஃபேவில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ஆர்டர்கள் என்ற மைல்கல்லை எட்டி இருப்பதாக தெரிவித்திருந்தார் இந்த பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் கூறி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்ட செய்தியில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் செப்டோ நிறுவனம் 95 கோடி ரூபாயை ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. ஸ்விக்கி , ஸோமேட்டோ ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக ஏப்ரல் மாதத்தில் 120 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications