கூடிய விரைவில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட இருக்கும் செப்டோ நிறுவனம் தன்னுடைய தாய் நிறுவனத்தின் பெயரை மாற்றி அமைத்திருக்கிறது. செப்டோவின் தாய் நிறுவனம் இதுநாள் வரை கிரானா கார்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் பெயரை செப்டோ பிரைவேட் லிமிடெட் என மாற்றியமைத்துள்ளனர்.
ஐபிஓ வெளியீடு செய்ய இருப்பதால் செப்டோ நிறுவனம் தன்னுடைய தாய் நிறுவனத்தின் பெயரை மாற்றி அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பங்குதாரர்கள் மத்தியில் தங்களுடைய பிராண்டை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக செப்டோ என்றே பெயரை மாற்றம் செய்திருக்கிறது. இதற்கு முன்பு ஸ்விக்கி நிறுவனமும் கூட தங்களுடைய தாய் நிறுவனத்தின் பெயரை பண்டல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்பதிலிருந்து ஸ்விக்கி பிரைவேட் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்தது.

ஸ்விக்கி நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐபிஓ வெளியீடு செய்தது. அதற்கு முன்னர் தன்னுடைய தாய் நிறுவனத்தின் பெயரை மாற்றி அமைத்தது. தங்களுடைய பிராண்டை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே நிறுவனங்கள் இவ்வாறு பெயர் மாற்றங்களில் ஈடுபடுகின்றன. செப்டோ நிறுவனம் மும்பையில் இருக்கும் நிறுவன பதிவாளரிடம் தங்களுடைய நிறுவனத்தின் பெயரை மாற்றி அமைப்பது தொடர்பாக விண்ணப்பம் செய்து அதற்கான ஒப்புதலை பெற்றுவிட்டது.
2025 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் வெளியாக இருக்கும் மிக முக்கியமான ஐபிஓவாக செப்டோ நிறுவனத்தின் ஐபிஓ பார்க்கப்படுகிறது. அண்மையில் தான் செப்டோ நிறுவனம் தங்களுடைய தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றி அமைத்தது. தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நிதி திரட்டிலிலும் ஈடுபட்டிருக்கிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் செப்டோ நிறுவனம் 1.35 பில்லியன் டாலர்கள் வரை நிதியை திரட்டி இருக்கிறது. செப்டோ நிறுவனத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் செப்டோ நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் பெரிய அளவு நம்பிக்கை வைத்திருப்பது தெரிய வருகிறது.
செப்டோ நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்தியாவில் குயிக்காமர்ஸ் பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்த வரும் நிறுவனமாக செப்டோ இருந்து வருகிறது. பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களுடன் செப்டோ போட்டி போட்டு கொண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆகியிருந்தாலும் செப்டோ நிறுவனம் இந்த நான்கு ஆண்டுகளில் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய பெரு நகரங்களில் எல்லாம் குயிக் காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications