காலேஜ் டிராப் அவுட் உருவாக்கிய Zepto.. இன்று ரூ.30000 கோடி, ஆனா ரூ.4.17 லட்சம் கோடிக்கு டார்கெட்..!

சென்னை: நம் நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமெல்லாம் ஒரு சிறிய விஷயத்திற்கே மனம் தளர்ந்து விடுவோம். தொற்று நோய் காலகட்டத்தில், கல்லூரியை பாதியில் நிறுத்தியவர் தற்பொழுது இந்தியாவின் ரூ. 33,000 கோடி ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை செயலியின் உரிமையாளர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். இதுப்போன்ற ஒருவரின் சுவாரசியக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோர் zepto-வை நிறுவியபோது அவர்களுக்கு வயது 19. ஆன்லைன் கிராசரி டெலிவரி செயலியான Zepto, தற்போது ரூ. 665 கோடி நிதி திரட்டியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 30,000 கோடியாக (3.6 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தை நிறுவிய ஆதித் பலிச்சா இதுகுறித்து சமூக வலைதளங்களில் தனது மகிழ்ச்சியையும், எதிர்கால திட்டங்களையும் பற்றி பகிர்ந்துள்ளார்.

 காலேஜ் டிராப் அவுட் உருவாக்கிய Zepto.. இன்று ரூ.30000 கோடி, ஆனா ரூ.4.17 லட்சம் கோடிக்கு டார்கெட்..!

தொற்று நோயின் காரணமாக கல்லூரியை விட்டு வெளியேறிய பாலிச்சா, Zepto-ஐத் தொடங்கி, அதனை 5 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு உழைத்து வருகிறார்.

இந்நிலையில் Glade Brook, Nexus, மற்றும் StepStone போன்ற ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் பெரும்பான்மையான பணத்தை Zepto நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். Avenir Growth, Lightspeed, Avra போன்ற புதிய முதலீட்டாளர்கள் மீதமுள்ள தொகையை முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் Zepto நிறுவனம் ரூ. 665 கோடி நிதி திரட்டியுள்ளது.

Zepto நிறுவனத்தின் போட்டியாளரான Swiggy நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள DST Global நிறுவனம், Zepto நிறுவனத்தில் ரூ. 100 கோடி முதலீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கல்லூரி படிப்பை நிறுத்தி Zepto நிறுவனத்தை தொடங்கிய ஆதித், தான் தொடங்கிய நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துத் தனது அதிகாரபூர்வ X தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் போஸ்டில் கூறியதாவது, " 3 வருடங்களில் கல்லூரியை விட்டுவிட்டு தொடங்கிய நிறுவனம் ஒன்று, வெறும் 3 ஆண்டுகளில் ரூ. 30,000 கோடி மதிப்புடைய நிறுவனமாக மாறியது, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.

மேலும், Zepto நிறுவனத்தை உலகத் தரம் வாய்ந்த ரு 50,000 கோடி மதிப்புள்ள இந்திய நிறுவனமாக மாற்றுவதற்கும், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். இந்த நாடு எங்களுக்கு அளித்த அனைத்திற்கும் இதுவே எங்களுடைய பதில் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வெற்றிக்குக் காரணம் அவர்களுடைய நம்பிக்கை மற்றும் கடின உழைப்பும் தான். இவர்கள் பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். கல்லூரியை பாதியில் நிறுத்தினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தை படித்து வந்துள்ளனர். அதனை அவர்கள் பாதியில் நிறுத்திவிட்டு ஸ்டார்ட் அப் பிளானை ஆரம்பித்து வளர்ந்து வரும் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+