Zepto: 10 நிமிஷத்துல மளிகை பொருட்கள் மட்டுமில்ல இனி நிலம் கூட வாங்கலாம்!!

இந்தியாவில் குயிக் காமர்ஸ் செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செப்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக பால், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை நாம் முதலில் டெலிவரி பெற்று வந்தோம்.

குயிக் காமர்ஸ்: குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் மளிகை பொருட்களை தாண்டி காய்கறி, பழங்கள், மின்னணு சாதனங்கள், ஆடை ,ஆபரணங்கள் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்ய தொடங்கின. இதனால் குயிக் காமர்ஸ் செயலிகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. குழந்தைகளுக்கான பொம்மைகளை கூட நாம் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் டெலிவரி பெற்று கொள்ள முடிகிறது.

 Zepto: 10 நிமிஷத்துல மளிகை பொருட்கள் மட்டுமில்ல இனி நிலம் கூட வாங்கலாம்!!

செப்டோவின் புதிய முயற்சி: குயிக் காமர்ஸ் டெலிவரியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் செப்டோ, புதிய முயற்சியாக ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. இனி செப்டோ வாயிலாக 10 நிமிடங்களில் சொந்தமாக ஒரு நிலத்தையே வாங்கலாம் என அறிவித்துள்ளது. எப்படி நாம் பத்து நிமிடங்களுக்குள் நமக்கு தேவையான மளிகை பொருட்களை டெலிவரி பெறுகிறோமோ அதேபோல பத்து நிமிடங்களில் இனி சொந்தமாக நிலமும் வாங்க முடியும் என செப்டோ நிறுவனம் விளம்பரம் செய்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் சேவை: செப்டோ நிறுவனமும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரு நிறுவனங்களும் கூட்டாக இந்த ஒப்பந்தம் செய்திருப்பதாக தங்களுடைய யூடியூப் பக்கங்களில் விளம்பரங்களை வெளியிட்டு இருக்கின்றன. அதில் பத்து நிமிடங்களில் ஒரு நிலத்தை உங்களால் உங்களுக்கு சொந்தமாக்க முடியும், செப்டோ வாயிலாக தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா உங்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர் .

 Zepto: 10 நிமிஷத்துல மளிகை பொருட்கள் மட்டுமில்ல இனி நிலம் கூட வாங்கலாம்!!

10 நிமிடங்களில் நிலம் வாங்கலாம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நீங்கள் செய்யும் முதலீடுகளை ஒரு முறை சிந்தித்து பாருங்கள் இந்தியாவின் பெரிய லேண்ட் டெவலப்பரான தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா உங்களுக்கு நிலம் வாங்குவதற்கான வாய்ப்பை மேலும் எளிதாக்கி இருக்கிறது என தெரிவித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செப்டோ மூலம் நிலம் விற்பனையை கொண்டு வந்துள்ளது.

வெற்றி பெறுமா: குயிக் காமர்ஸ் பிரிவில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் செப்டோ நிறுவனம் நிலம் விற்பனையிலும் கால் பதித்திருக்கிறது . இது இந்தியாவில் குயிக் காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அந்த நிறுவனங்கள் மீது மக்கள் முன்வைக்கும் நம்பிக்கை உள்ளிட்டவற்றை காட்டுகிறது. இருந்தாலும் 10 நிமிடங்களில் ஒரு நிலத்தை நம்மால் வாங்கி விட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. நிலத்தை பார்க்க வேண்டும், நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பல விஷயங்கள் இதில் இருக்கின்றன. மக்கள் இந்த சேவையை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பொறுத்து இது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+