செப்டோ (Zepto) நிறுவனர் மற்றும் ஷாதி டாட் காம் (Shaadi.com) தளத்தின் தலைமை செயல் அதிகாரி இடையே சமூக வலைத்தளத்தில் நிகழ்ந்த கலந்துரையாடல் வைரல் ஆகியுள்ளது. செப்டோ இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குயிக் காமர்ஸ் தளமாகும். அதே போல திருமண வரன் பார்க்கும் ஷாதிடாட்காம் தளமும் இந்தியாவில் பிரபலமானது.
அண்மையில் ஷாதி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுப்பம் மிடல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் செப்டோ மற்றும் ஷாதி டாட் காம் நிறுவனங்களின் விளம்பர பதாகை இடம் பெற்றுள்ளது.

செப்டோ நிறுவனத்துக்கான விளம்பரத்தில் பத்து நிமிடங்களிலேயே மன்யவர் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆடைகள் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மன்யவார் வேண்டுமா? 10 நிமிடங்களில் கிடைத்துவிடும் என அதில் அச்சிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஷாதி டாட் காம் இணையதளத்தின் விளம்பரத்தில் மணமகன் வேண்டுமா? பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பதிவு செய்துள்ள அனுப்பம் மிட்டல் செப்டோ மற்றும் ஷாதி டாட் காம் இடையே தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அனுப்பம் மிடல் செப்டோ நிறுவனர் ஆதித் பலிச்சாவிடன் மணமகள் வேண்டுமா என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
22 வயதான ஆதித்தை டேக் செய்து மணமகள் வேண்டுமா என கிண்டலாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு ஆதித் பலிச்சா நான் ஏற்கனவே என்னுடைய நிறுவனத்தை திருமணம் செய்து விட்டேன் என கிண்டலாக பதிலளித்துள்ளார். இவர்களின் இந்த கலந்துரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. செப்டோ நிறுவனம் இந்தியாவில் குயிக்காமர்ஸ் துறையில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நிறுவனமாக இருக்கிறது.
மளிகை பொருட்கள், பால் உள்ளிட்டவை மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களோடு அதாவது டெக்ளதான் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட சில பேஷன் நிறுவனங்களோடு இணைந்து ஆடை உள்ளிட்டவற்றையும் பத்து நிமிடங்களில் டெலிவரி செய்து வருகிறது செப்டோ. ஆதித் பலிச்சா தன்னுடைய நண்பருடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு செப்டோவை தொடங்கினர்.
அப்போது இவர்களுக்கு வயது 21 தான், தற்போது செப்டோ நிறுவனம் இந்தியாவின் முன்னணி குயிக் காமர்ஸ் டெலிவரி நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ஆதித் பலிச்சாவும் அவருடைய நண்பரும் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கின்றனர். இதில் ஆதித் பலிச்சா இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இவர் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications