சென்னை: பிரபல குயிக் காமர்ஸ் தளமான ஸெப்டோ ஐபோன் 16 சீரிஸ் போன்களுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அண்மையில் தான் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. ஐபோன் மாடல்கள் ஒவ்வொரு பதிப்பு வெளியிடப்படும் போதும் உலகளவில் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த மாடல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது தனிச்சிறப்பு. எப்படியாவது இந்த போனை வாங்க வேண்டும் என காத்திருப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கியுள்ளது ஸெப்டோ.

பல்வேறு இ காமர்ஸ் தளங்களிலும் ஐபோன் 16 மாடல் போன்களுக்கு வங்கிகளின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவை வாயிலாக தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரபல குயிக் காமர்ஸ் தளமான ஸெப்டோ ஐபோன் 16க்கு 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ஐபோன் 16 மாடலில் அடிப்படை போனின் உண்மையான விலை 79, 900 ரூபாய் ஆகும். இதனை ஸெப்டோ தளத்தில் 10,000 ரூபாய் தள்ளுபடியில் 69 , 900 ரூபாய்க்கு வாங்க முடியும்.
ஐபோன் 16 சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வகை போன்களுக்கும் இந்த 10, 000 ரூபாய் தள்ளுபடி பொருந்தும் என ஸெப்டோ தெரிவித்துள்ளது. 10,000 ரூபாய் தள்ளுபடி மட்டுமில்லாமல் இந்த போனை நீங்கள் ஆர்டர் செய்த 10 நிமிடங்களிலேயே எந்தவித டெலிவரி கட்டணமும் இல்லாமல் உங்கள் கைகளுக்கு வந்து சேரும் என ஸெப்டோ தெரிவித்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் போன்களில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதிதாக கொண்டுவரப்பட்ட ஏ18 சிப்பினை கொண்டு இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இது வேகமாக செயல்படுகிறது என்பதோடு குறைந்த அளவிலான பேட்டரி மட்டுமே பயன்படுத்துகிறது. எனவே வீடியோ கேம் விளையாடுவது போன்ற அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்துபவர்களுக்கும் ஏற்ற மாடலாக இது இருக்கிறது.
பக்கவாட்டில் கேமராவின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பட்டனுடன் இந்த போனானது விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கேமரா செயலிக்குள் நுழைவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது ஸூம் செய்வது என அனைத்தையும் இந்த ஒரு பட்டனை கொண்டே இயக்க முடியும்.
மேலும் இந்த போனில் மற்றொரு சிறப்பு அம்சமாக ஆக்ஷன் பட்டன் என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .ஒரே நேரத்தில் ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலிக்கு மாறுவதற்கு இந்த பட்டனை அழுத்தினாலே போதும். இவ்வாறு பல நவீன அம்சங்களோடு ஐபோன் 16 மாடல் போன்கள் விற்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications