இன்றைய டிஜிட்டல் வர்த்தக உலகில் முக்கியமான வர்த்தக பிரிவாக பார்க்கப்படும் குவிக் காமர்ஸ் துறையில் பல முன்னணி நிறுவனங்களை ஓவர்டேக் செய்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் Zepto நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் முதல் யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்து ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் துறைக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது.
குவிக் காமர்ஸ் துறையில் கூகுள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டை பெற்று இயங்கிவரும் டன்சோ சமீப காலமாக அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் திவாலாகி விடுமா என்ற அச்சத்தில் இருக்கிறது. இதேபோல் இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீட்டை பெற முடியாமல் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் குவிக் காமர்ஸ் துறையில் இருக்கும் Zepto நிறுவனம் சுமார் 200 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்று சுமார் 1.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்று 2023 ஆம் ஆண்டின் முதல் யூனிகார்ன் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்திய ஸ்டார்ட்அப் பண்டிங் துறையின் 11 மாத வறட்சியை நிறுத்தியுள்ளது Zepto.
Zepto நிறுவனத்தின் சீரியஸ் ஈ முதலீட்டு சுற்றில் அமெரிக்க சொத்து மேலாண்மை நிறுவனமான ஸ்டெப்ஸ்டோன் குரூப் தலைமையில் குட்வாட்டர் கேப்பிடல் மற்றும் Zepto நிறுவனத்தின் பழைய முதலீட்டாளர்கள் சிலர் கூட்டணி 200 மில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளது.
Zepto-வின் மே 2022 முதலீட்டு சுற்றில் 900 மில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்ற நிலையில் இந்த 200 மில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் 1.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது. மேலும் யூனிகார்ன் என்றால் என்ன என தெரியமால் இருக்கும் அனைவருக்கும் ஒரு சிறிய விளக்கம், எப்போது ஒரு நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைகிறதோ அப்போது அந்த நிறுவனத்தை யூனிகார்ன் என அழைக்கப்படுகிறது.

Zepto-வின் இந்த 200 மில்லியன் டாலர் முதலீட்டில் 105 மில்லியன் டாலர் முதலீட்டை அமெரிக்க சொத்து மேலாண்மை நிறுவனமான ஸ்டெப்ஸ்டோன் நிறுவனத்தின் வாயிலாக வந்துள்ளது. குட்வாட்டர் கேப்பிடல் 30 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
Zepto தனது முதல் முதலீட்டை ஜனவரி 2021ல் 7,30,000 டாலரை முதலீடா பெற்றது, இந்த முதலீட்டை வைத்து தான் ஸ்டார்ட்அப் நகரமான பெங்களூரில் தனது வர்த்தகத்தை ஏப்ரல் மாதம் துவங்கியது. Zepto நிறுவனம் குறித்தும் அதன் நிறுவனர் குறித்தும் தெரிந்துக்கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications