இந்தியாவில் பல நிறுவனங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ், பரிசு பொருட்களை கொடுத்து வரும் வேளையில், குவிக் காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜெப்டோ இந்நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஜெப்டோ நிர்வாகம் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் சுமார் 300 ஊழியர்களை நீக்கியுள்ளது. இத்துறையில் அதிகரித்து வரும் போட்டி சூழலில் நிறுவனத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பணிநீக்கம் மூலம் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை பாதிக்காமல், ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிலையான செலவுகளை குறைக்க உதவும்.

தற்போது ஜெப்டோ நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட 300 ஊழியர்கள், ஜெப்டோவின் ஊதிய பட்டியலிலிருந்து அகற்றப்பட்டு, மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது 300 ஊழியர்களை நேரடியாக பணியில் அமர்த்தாமல் மூன்றாம் தரப்பு நிறுவனத்தில் அமர்த்தி இந்நிறுவனத்திற்கு பணியாற்ற வைத்து வருகிறது.
இந்த மூன்றாம் தரப்பு நிறுவனம் ஜெப்டோ உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதனால், நிறுவனத்தின் நிலையான செலவுகள் மாதந்தோறும் குறையும், ஆனால் உற்பத்தித்திறன் பாதிக்காது என்பது ஜெப்டோவின் திட்டம்.
இந்த ஊழியர்கள் ஜெப்டோ நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ், தொழில்நுட்பம், கேட்டகரி மேனேஜ்மென்ட், நிதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. மேலும் இந்த ஊழியர்கள் மாற்றம் மூலம், போட்டி மிகுந்த சூழலில் செலவை கட்டுப்பாடுத்தும் முக்கியமான உத்தியாக பார்க்கப்படுகிறது.
ஜெப்டோ இந்த 300 ஊழியர்கள் மாற்றத்தைத் தவிர, இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்தம் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும், இடம் மாற்றியும் நிர்வாக செலவுகளை குறைத்து வருகிறது. தற்போது ஜெப்டோவின் பேரோலில் 5,700 ஊழியர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கையை குறையாமல் தொடர்ந்து செயல்பாடுகளை மட்டுமே மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜெப்டோ நிறுவனம் சமீபத்தில் 450 மில்லியன் டாலர்கள் முதலீட்டை திரட்டியுள்ளது, இந்த நிதி சுற்றிள் இந்நிறுவனத்தின் மதிப்பீட்டை 7 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டு நிதி திரட்டும் போது ஜெப்டோ 5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் தான் முதலீட்டை ஈர்த்தது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications