பெங்களூரு: பிரபல குயிக் காமர்ஸ் நிறுவனமான ஸெப்டோ பெங்களூருவில் ஒரு மிகப்பெரிய இடத்தை குத்தகைக்கு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஸெப்டோ நிறுவனம் தன்னுடைய தலைமை அலுவலகத்தை பெங்களூருக்கு மாற்ற இருப்பது உறுதியாகி உள்ளது.
மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் சர்ஜாபூர் பகுதியில் உள்ள ஒரு மாலினை குத்தகைக்கு எடுத்துள்ளது.

இதனை முழுவதுமாக தங்களுடைய அலுவலகத் தளமாக ஸெப்டோ மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தங்களுடைய ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி மாதத்திற்குள் பெங்களூருக்கு குடிபெயர வேண்டுமென இந்த நிறுவனம் கூறியுள்ளது. தற்போது ஸெப்டோ நிறுவனம் மும்பையின் போவாய் பகுதியை தலைமை இடத்தை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் முதல் கட்டமாக நவம்பர் மாதத்திலேயே சுமார் 1800 ஊழியர்களை பெங்களூருக்கு மாற்றம் செய்ய இருப்பதாக கூறி இருந்தது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து ஊழியர்களையும் இங்கே இடமாற்றம் செய்வதற்கு ஸெப்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. பெங்களூரில் மாற்றப்படும் தங்களுடைய அலுவலகத்தில் இருந்து நவம்பர் 11ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமான அலுவல்கள் அனைத்தும் தொடங்கப்படும் என ஸெப்டோ நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது ஸெப்டோ நிறுவனத்தை பொருத்தவரை அதன் தொழில்நுட்ப குழுவினர் மட்டும் பெங்களூருவிலும் மற்ற தொழில் சார்ந்த குழுவினர் அனைவரும் மும்பையில் இருந்தும் வேலை செய்கின்றனர். இதனிடையே அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக அனைத்து அலுவலகங்களையும் பெங்களுருவுக்கே இந்த நிறுவனம் மாற்றி உள்ளது.
சர்ஜாபூர் பகுதியில் புகழ்பெற்ற ஒரு மாலாக இருந்தது தான் டோட்டல் மால். ஸெப்டோ நிறுவனம் இதனை குத்தகைக்கு வாங்கி, மார்க்கெட் ஸ்கொயர் மால் என பெயர் மாற்றம் செய்ய இருக்கிறது. குயிக் காமர்ஸ் பிரிவில் ஒரு முன்னோடியாகவும் முன்னணி நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது ஸெப்டோ.
மும்பையில் இருந்து பெங்களூருக்கு இடம் மாற்றம் செய்வதற்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை இந்த நிறுவனம் வாடகை பணத்தை மிச்சம் செய்வதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே ஸ்விக்கி மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் பெங்களூருவில் தான் செயல்படுகின்றன.
தற்போது ஸெப்டோவும் அவர்களுக்கு போட்டியாக பெங்களூருருக்கே தன்னுடைய தலைமையகத்தை மாற்றி உள்ளது. ஸெப்டோ நிறுவனம் பெங்களூருவில் தங்களுடைய நிறுவனத்தை மாற்றிய பிறகு கூடுதலாக 500 பேரை பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2300 என அதிகரிக்கும்.
Written by: Devika
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications