பொதுவாக காய்கறிகள் வாங்கும் போது காய்கறி வியாபாரி கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை இலவசமாக வழங்குவார். ஆனால் அதிக அளவில் தேவை இருக்கும் போது 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் கொடுத்து, தங்களுக்கு வேண்டியவற்றை மக்கள் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் தற்போது மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் பிளாட்பார்மான செப்டோ (Zepto) 100 கிராம் கொத்தமல்லி இலைகளை 141 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதை அடுத்து ஒருவர் அதனை X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரங்களைப் பற்றி, இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
X பயன்படுத்தும் "Harsh Upadhyay" என்ற பயனர் தனது Zepto செயலியின் விலைப்பட்டியலின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்ததில் இருந்து, பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவேற்றி வருகின்றனர். அதில் அவர் கொத்தமல்லி இலைகளின் விலையை பகிர்ந்துள்ளார்.

அவருடைய X பதிவு விரைவில் வைரலானது. அதன் பின் கடைக்காரர்கள் பல்வேறு மளிகை விநியோக செயலிகளைப் பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் கொத்தமல்லி வாங்கிய கதைகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அவர்களில் ஒருவரான Luffy என்ற பயனர் பிளிங்கிட்டில் 100 கிராம் கொத்தமல்லி தழை ரூ. 40-க்கு கிடைக்கிறது என்று பகிர்ந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த எட்டெக் தொழிலதிபர் சௌரப் ஜெயின் என்பவர் பிளிங்கிட்டிலிருந்து கொத்தமல்லி தழையை சுமார் ரூ. 50-க்கு வாங்கியதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, 10 ரூபாய்க்கு சந்தையில் எளிதாகக் கிடைக்கும் கொத்தமல்லி இலைகள், ஏன் ஷாப்பிங் ஆப்ஸில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது என்ற விவாதங்கள் எழுந்தன.
சில நாட்களுக்கு முன்பு, என் அம்மா என்னிடம் கொத்தமல்லி ஆர்டர் செய்யச் சொன்னார். Blinkit-இல் 100 கிராம் ரூ. 30க்கு இருந்தது, ஆனால் மார்க்கெட் விலை ரூ. 10. அதற்கு மேல் ரூ. 30 டெலிவரி கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸ் என்பதால் ரூ. 30 கூடுதல் கட்டணம், மேலும் ரூ. 5 ஹேண்ட்லிங் கட்டணம். எனவே, ரூ. 10 பொருளை ரூ. 95-க்கு விற்பனை செய்கிறார்கள் என்று பல் மருத்துவர் Vrijilesh Rai கூறியுள்ளார் .
Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆதித் பலிச்சா, ஜூலை 6 ஆம் தேதி அடுத்த 18 முதல் 24 மாதங்களில் ஆஃப்லைன் சில்லறை விற்பனை துறையின் முன்னோடியான DMart நிறுவனத்தை விற்பனை அளவில் கடந்து விடுவோம் என்று கூறியிருந்தார்.
Zepto நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு ரூ.141 வரை விலை வைப்பது சரியில்லை என்று சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனென்றால், 2 வருடங்களில் DMart நிறுவனத்தை விட பெரிய நிறுவனமாக மாற வேண்டும் என்ற இலக்கை Zepto கொண்டுள்ளது.
விலையை குறைத்து, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை கருத்தில் கொண்டால் Zepto நிறுவனம் தனது இலக்கை அடைய அதிக வாய்ப்பு இருக்கும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications