ரூ.12 லட்சம் வரை ஜீரோ வருமான வரி அறிவித்தும் பயனில்லை.. நிர்மலா சீதாராமன் என்ன செய்ய போகிறார்..?

மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நடத்திய சமீபத்திய ஆய்வில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிக் குறைப்புகள் பெரிய அளவில் இருந்தாலும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வருமான வரி முறையின் கீழ் 12 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் முறையின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு நாட்டில் தற்போது வரி செலுத்தும் மக்களில் சுமார் 1 கோடி பேருக்கும் அதிகமான மக்களக்கு பலன் கொடுக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ரூ.12 லட்சம் வரை ஜீரோ வருமான வரி அறிவித்தும் பயனில்லை.. நிர்மலா சீதாராமன் என்ன செய்ய போகிறார்..?

இதோடு இந்த பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கான வரியும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டதன் மூலம் மொத்தம் சுமார் ரூ. 1 லட்சம் கோடி அதாவது 12 பில்லியன் டாலர் வரி நிவாரணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வரி தளர்வுகள் மூலம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் வெறும் 10-20 அடிப்படை புள்ளிகள் (0.10 - 0.20 சதவீதம்) மட்டுமே அதிகரிக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி தளர்வுகள் கொடுத்தும் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணத்தையும், இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஆதாவது நுகர்வோர் தங்களது வரி சேமிப்பை செலவழிப்பதை விட கடன் சுமையைக் குறைப்பதற்கே பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பே இந்த மந்தமான பொருளாதார வளர்ச்சி கணிப்பிற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

மோதிலால் ஓஸ்வாலின் பொருளாதார நிபுணர்கள், நிகில் குப்தா மற்றும் தனிஷா லாதா ஆகியோர் தங்கள் அறிக்கையில், வரி நிவாரணம் மூலம் மக்கள் கையில் கிடைக்கும் கூடுதல் நிதியின் பெரும் பகுதியை மக்கள் தங்கள் கடன் சுமையை குறைக்க ஒதுக்க வாய்ப்புள்ளது என்று விளக்கியுள்ளனர்.

கடந்த 10 வருடத்தில் இந்திய குடும்பங்களின் கடன் கணிசமாக அதிகரித்துள்ளது. வருமானத்தில் சுமார் 35% ஆக இருந்த கடன் அளவு தற்போது சுமார் 52% ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிக கடன் அளவு மக்களின் செலவு செய்யும் முறைகளை பாதிக்கும். இதேபோல் கடனுக்கான வட்டியும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இது மக்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது.

இந்த நிலையில் மக்கள் தாங்கள் விரும்பு பொருட்களை வாங்குவதை காட்டிலும் வாழ்க்கையில் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தா வாழ்க்கை முறையை பாதிக்காத அடிப்படை பொருட்களை மட்டுமே வாங்க முன்னுரிமை அளிப்பார்கள். இப்படியிருக்கும் சூழ்நிலையில் வரி குறைப்பால் கிடைக்கும் கூடுதல் நிதியை கட்டாயம் மக்கள் கடன் சுமையை குறைக்கவே பயன்படுத்துவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரிக் குறைப்புகளை தாண்டி, உள்கட்டமைப்பு செலவினங்களில் 10% மட்டுமே அதிகரித்து அறிவித்தார். இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி 2021 முதல் 2024 வரையிலான நிதியாண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 30% என்ற அளவில் கணிசமாக அதிகரித்தது. இந்த ஆண்டில் வெறும் 10 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+