பங்குச்சந்தை முதலீட்டில் சூப்பர்ஸ்டார் ப்ரோகரேஜ் நிறுவனமாக விளங்கும் Zerodha குறைந்த காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை பெற்றது மட்டும் அல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக பல சேவைகளை வழங்கி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
இன்றளவில் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் Zerodha தளத்தில் மொத்த கணக்கில் 15 சதவீதம் வரையில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் Zerodha மியூச்சுவல் பண்ட் முதலீட்டு சேவை அளிப்பதற்காக பல மாதங்களாக முயற்சி செய்து வரும் வேளையில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி Zerodha-வுக்கு AMC உரிமையை கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

செபி அமைப்பு Zerodha-வுக்கு Asset Management Company அமைப்பதற்காக உரிமம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நித்தின் காமத் தெரிவித்துள்ளார். AMC உரிமம் என்பது வாடிக்கையாளர்களிடம் (மக்கள்) முதலீட்டை திரட்டி இதை பங்குகள், அரசு பத்திரங்கள், ரியல் எஸ்டேட், போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான அனுமதி.
இந்த நிலையில் Zerodha நிறுவனம் தனது புதிய Zerodha AMC பிஸ்னஸ்-ஐ கூட்டணியில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. Smallcase என்னும் நிறுவனத்துடன் இணைந்து, தனது சொந்த பணத்தை முதலீடாக வைத்து AMC வர்த்தகத்தை துவங்க உள்ளது Zerodha.
Zerodha நிறுவனம் ஆரம்பம் முதல் தனது சொந்த பணத்தை வைத்தே நிறுவனத்தையும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்து வருகிறது. ஆனால் ஸ்மால்கேஸ் நிறுவனத்தில் இதுவரையில் அமேசான், ஹெச்டிஎப்சி பேங்க், பீக் XV கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.

மேலும் Zerodha AMC பிஸ்னஸ்-ன் தலைவராக விஷால் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார், இவர் ETF துறையில் பல வருடமாக பணியாற்றியுள்ளார், Zerodha நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு 5 வருடம் நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். இதன் மூலம் Zerodha AMC விரைவில் தனது சொந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
AMC பிரிவில் அடுத்தடுத்து 3 நிறுவனங்கள் வருகிறது சச்சின் பன்சாலின் நாவி நிறுவனம், எஸ்ஸல் மியூச்சுவல் பண்ட் கைப்பற்றியது மூலம் AMC உரிமத்தை பெற்றுள்ளது. இதேபோல் Groww நிறுவனம் இந்தியாபுல்ஸ் AMC கைப்பற்றியது மூலம் AMC வர்த்தகத்திற்குள் வருகிறது. இதை தாண்டி முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், அமெரிக்காவின் பிளாக்ராக் உடன் இணைந்து JIO BLACKROCK என்னும் நிறுவனத்தை துவங்கி தற்போது AMC வர்த்தகத்திற்குள் நுழைகிறது.


Click it and Unblock the Notifications