இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதி போட்டி பல விமர்சனங்கள், ஆய்வுகள், இந்தியா தோற்றுப்போக என்ன காரணம், ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்தது என்ன, பவுலிங் சொதப்பல், பேட்டிங் தான் சொதப்பல் என பல விஷயங்கள் இன்று காலையில் இருந்து பதிவுகள் சமுக வலைத்தளத்தில் பகிரப்பட்டு உள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், இந்த போட்டியில் பல முக்கியமான தருணங்கள் மக்கள் மனதில் பலருக்கும் நீங்கா நினைவுகளை கொடுத்துள்ளது. அப்படிதான் பிரபல முதலீட்டாளர், நிறுவனர் நிகில் காமத்-க்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பங்குச்சந்தை தரகு நிறுவனமான Zerodha இன் இணை நிறுவனர் நிகில் காமத், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை போட்டியை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் உடன் பார்த்துள்ளார். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகப்பெரிய அளவிலான கொண்டாட்டத்துடன் துவங்கி சோகத்துடன் (இந்தியர்களுக்கு) முடிந்தது.
உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியுற்றது பெரும் இழப்பாக இருந்தாலும் நிகில் காமத்-க்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் உடன் பார்த்த அனுபவம், வாய்ப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடன் பார்த்த தருணத்தை நிகில் காமத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நிகில் காமத் தனது டிவிட்டரில் சக்திகாந்த தாஸ் உடனான ஒரு புகைப்படத்தை பதவிட்டு, விளையாட்டின் போது அவரிடம் ஒரு முக்கியமான நிதியியல் பாடத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டார். நிகில் காமத்-ன் பதிவு பல நூறு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
"சிலவற்றை வெல்லலாம், சிலவற்றை இழக்கலாம்... ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் சிறந்த ஆசிரியராக மேட்சின் போது கற்றுக்கொண்ட நிதி பற்றிய பாடம்" என்று நிகில் காமத் எழுதினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதி போட்டி நடந்த அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் முழுவதும் பிரபலங்கள் நிறைந்த கூட்டமாக மாறியது, ஒருபக்கம் அரசியல் தலைவர்கள், இன்னொரு பக்கம் நிறுவனங்களின் தலைவர்கள், நிறுவனர்கள் என பவர்ஃபுலான மக்கள் நிறைந்து காணப்பட்டனர்.
இன்னோரு பக்கம் சினிமா, இணையத்தள நட்சத்திரங்களான ஷாருக்கான், கௌரி கான், ஆர்யன், சுஹானா மற்றும் ஆப்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், பிரகாஷ் படுகோன், பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, ஆயுஷ்மான் குரானா மற்றும் கிரிக்கெட் ஐகான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் வந்தனர். ஆஸ்திரேலியா அணி ஆறாவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையை வென்றது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications