இந்தியாவின் பிரபல முதலீட்டு செயலியான ஸெரோதா நிறுவனர் நிதின் காமத்தின் மனைவி தான் புற்றுநோயிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்த நம்பிக்கையூட்டும் செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
இந்தியாவில் சாதாரண மக்களும் எளிய முறையில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை எளிதாக்கிய ஒரு செயலி ஸெரோதா. இதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிதி காமத்தின் மனைவி சீமா பாட்டிலுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. ஓராண்டு சிகிச்சைக்கு பிறகு அவர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

தற்போது ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவர், புற்றுநோய் சிகிச்சையின் போது தான் அனுபவித்த கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் ஒரு பாட்காஸ்டில் விவரித்திருக்கிறார்.
கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டு சீமா பாட்டிலுக்கு மார்பகப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு மருத்துவர்கள் கீமோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
அதன்படி முதல் முறை கீமோதெரபி எடுத்துக்கொண்ட போது தான் மிகப்பெரிய வேதனையை அனுபவித்ததாகவும் இந்த வேதனையில் வாழ்வதற்கு செத்துப் போகலாம் என நினைத்ததாகவும் சீமா பாட்டில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து ஒரு முன் உதாரணமாக நாம் மாற வேண்டும் என மன உறுதியை எடுத்துக் கொண்ட அவர் இரண்டாவது முறை கீமோதெரபி முடிந்த பிறகு நாம் சோர்வுடன் இருக்கக் கூடாது நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்ற உறுதியோடு எழுந்து நடக்கத் தொடங்கியதாக கூறியுள்ளார். படிப்படியாக தன்னுடைய வேலைகளை செய்ய தொடங்கி மிக விரைவாக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்ததாகவும் தி அதர் சைட் எனப்படும் பாட்காஸ்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோய் இருந்தாலும் உடற்பயிற்சி உள்ளிட்ட பழக்க வழக்கங்களை தொடர்ந்ததாகவும், அது தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் மிகப்பெரிய அளவில் தேற்றியதாகவும் கூறியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் நிதின் காமத் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.
தான் சோர்வுடனும் சோகமுடனும் இருக்கும்போது என்னை சிரிக்க வைத்தார் நிதின் காமத், அவர் எந்த விஷயத்தையும் மன அழுத்தத்துடன், நெகடிவ்வாகவும் அணுக மாட்டார், அதனையே நானும் பின்பற்றியதால் மிக எளிதாக புற்றுநோயிலிருந்து மீண்டு வர முடிந்தது என சீமா பாட்டில் கூறியுள்ளார்.
தனக்கு புற்றுநோய் இருப்பதையும் அதற்காகத்தான் சிகிச்சை பெற்று வருவதையும் மகனிடம் தெரிவிக்க வேண்டாம் .மறைத்து விடலாம் என நினைத்ததாகவும், ஆனால் மகனை அழைத்து தன்னுடைய பிரச்சனை மற்றும் அதற்காக தான் மேற்கொண்டு வரும் சிகிச்சைகளை எடுத்துரைத்ததாகவும் அவனும் புரிந்து கொண்டு தன்னுடைய சிகிச்சை காலத்தில் மிக உறுதுணையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்ததோடு ஃபிட்டான நபராகவும் சீமா பாட்டில் இருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications