பெங்களூரு: தற்போது சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே குடியிருப்பதா என்ற குழப்பம் பல இளைஞர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் எப்பொழுதும் வாடகை வீட்டுக்கு சாதகமாகவே பேசி வந்த ஸெரோதா (zerodha) தளத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் திடீரென தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நிகில் காமத் பாட்கேஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். பிரஸ்டீஜ் குழுமத்தின் தலைவர் இர்ஃபான் ரசாக் , பிரைகேட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிருபா சங்கர், வீ வொர்க் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரன் பிர்வானி ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நிகில் காமத் தான் சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாக தெரிவித்தார்.

வாடகை வீட்டினை விட்டு தற்போது சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாக அவர் தெரிவித்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்போது விளக்கம் அளித்த அவர், வீட்டினை வாடகைக்கு எடுத்து குடியிருப்பது என்பது பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆனால் அதில் ஒரு குறைபாடு இருக்கிறது. நீங்கள் நீண்ட காலம் இந்த வீட்டில் வாழ வேண்டும் என எண்ணம் ஏற்படும் போது உங்களது சொந்த வீடாக இருந்தால் மட்டுமே முடியும். இந்த நிலையில் தான் ஒரு வீட்டை சொந்தமாக வாங்குவது அர்த்தமுள்ளதாக நான் உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரிடம் சொந்தமாக வீடு வாங்குவது அல்லது தங்களது பெயரில் சொந்தமாக வீடு வைத்திருப்பது என்பது வலுவான நிதி அமைப்பையும் ஒரு பாதுகாப்பு உணர்வையும் தருகிறது அல்லவா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் ரியல் எஸ்டேட் முதலீட்டினை பொருத்தவரை உடனடியாக அதனை நீங்கள் விற்பனை செய்து பணமாக்க முடியாது, அப்படி பார்க்கும்போது தங்கம் தான் உடனடியாக நம்மால் பணமாக மாற்ற கூடிய ஒரு சொத்தாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த பாட்கேஸ்ட் வெளியானதை அடுத்து பலரும் சொந்த வீடு வாங்குவது சிறந்ததா வாடகை வீட்டிலேயே இருப்பது சிறந்ததா என்ற விவாதத்தை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே சில முதலீட்டு நிபுணர்கள் ஒரு முதலீட்டுக்காக வேண்டும் என்பதற்காக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாதீர்கள் எனக் கூறுகின்றனர்.
ஏனெனில் இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடுகளை பொருத்தவரை சராசரியாக 5% வரை அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. ஆனால் நமது பணவீக்கம் அதைவிட அதிகமாக இருக்கிறது என்கின்றனர்.
உங்களுடைய மொத்த போர்ட்போலியோவில் 30 சதவீதம் தொகையை நீங்கள் வீடு வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்கிறீர்கள் என்றால் அது நலம். ஆனால் கடன் வாங்கி வீடு வாங்குவது என்பது சிறந்தது கிடையாது, ஏனெனில் அந்த கடனை அடைப்பதற்கு 9 சதவீதத்திற்கு மேல் நீங்கள் வட்டி செலுத்த வேண்டும், வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு 12 சதவிதம் உயர்ந்தால் கூட உங்களது லாபம் 3 சதவீதம் தான் என்கின்றனர்.
இதையே நீங்கள் வேறு முதலீடுகளின் வைத்திருந்தால் குறைந்தது 9 சதவீதத்திலிருந்து உங்களுக்கு லாபமே கிடைத்திருக்கும் எனக் கூறுகின்றனர்.
ஒருவேளை நீங்கள் ஒரு வீட்டினை வாங்குவது உங்களுக்கு மனரீதியாக ஒரு முழுமையான உணர்வை தருகிறது என்றால் நிச்சயமாக நீங்கள் அதனை வாங்கலாம். அதன் மூலம் உங்களுக்கு வாடகை வருமானம் உள்ளிட்டவை கிடைக்கிறது என்றால் கண்டிப்பாக அதற்கு போகலாம் என்றும் ஒரு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications