இந்தியாவின் தரகு நிறுவனமான ஜெரோதாவின் நிகர லாபம் 2022ம் நிதியாண்டில் இருமடங்கு அதிகரித்து, 2094 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் 1112 கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், காமத் சகோதாரர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதமானது, 82% அதிகரித்து, 4963 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
செலவு அதிகரிப்பு
எனினும் நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாயை தாண்டி செலவினங்கள் என்பது அதனை தாண்டியும் அதிகரித்துள்ளது. இதன் செயல்பாட்டு செலவினம் என்பது 71% அதிகரித்து, 2164 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பெங்களூரை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தின் EBE விகிதம், 45% வளர்ச்சி கண்டுள்ளது. இது 2022ம் நிதியாண்டில் 459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தகவல் தொழில்நுட்ப செலவானது 78.2% அதிகரித்து, 303 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிதி திரட்டவில்லை
நிகில் மற்றும் நிதின் காமத் ஆகிய இருவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், 2009ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் குரோவ் மற்றும் அப்ஸ்டாக்ஸ் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகின்றது. இந்த நிறுவனம் இதுவரையில் எந்த நிதியினையும் திரட்டவில்லை. ஆரம்பத்தில் நிதி திரட்ட திட்டமிட்டதாகவும், ஆனால் அப்போது முதலீட்டாளர்கள் யாரும் இல்லை. எங்களுக்கு எப்போது பணம் தேவைப்பட்டதே அப்போது கிடைக்கவில்லை. அதேபோல தங்களது நிறுவனத்தின் ஐபிஓ திட்டத்தினையும் திட்டமிடவில்லை என பிசினஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஜெரோதாவின் கட்டண வருமானம்
ஜெரோதாவில் 9 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 6.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் செயல்பாட்டில் உள்ளனர். ஜெரோதா நிறுவனத்தின் கட்டணங்கள் மற்றும் கமிஷன் வருமானம் 2252 கோடி ரூபாயில் இருந்து, 4128 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வட்டி வருமானம் 614 கோடி ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
செலவு அதிகரிப்பு
ஒரு புறம் லாபம் மற்றும் வருவாய் விகிதமானது அதிகரித்தாலும், செலவினமும் அதிகரித்துள்ள நிலையில் வரவிருக்கும் ஆண்டுகளில் நிறுவனம் இதில் கவனம் செலுத்தலாம்.
நாட்டில் பணக்கார தொழில் முனைவோர்களில் ஒருவரான காமத் சகோதரர்கள், இந்தியாவில் முன்னணியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications