பங்குச் சந்தை தரகு நிறுவனமான ஜெரோதா-வின் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் கமத், ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வேளையில் STT (Securities Transaction Tax) உயர்வு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ட்வீட்டில் குற்றம்சாட்டியுள்ளார்.
நிதின் காமத் தனது டிவிட்டர் பதிவில் பட்ஜெட் 2024இல் எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்தில் STT 60 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஃபியூச்சர்ஸ் வரி 0.0125%லிருந்து 0.02%க்கும், ஆப்ஷன்ஸ் வரி 0.0625%லிருந்து 0.1%க்கும் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு ஆரம்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய பங்குச்சந்தையில் புல் மார்க்கெட் தொடர்ந்தது. ஆனால் சந்தை எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்காது. கடந்த ஆண்டு இந்த உயர்வின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது என்று நிதின் கமத் கூறியுள்ளார்.

2025-26 நிதியாண்டுக்கு STT வசூல் இலக்கு ரூ.78,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 11 வரை வசூலான தொகை சுமார் ரூ.45,000 கோடி. மார்ச் 31 வரை இன்னும் ரூ.12,000 கோடி வசூலானாலும் மொத்தம் ரூ.57,000 கோடி மட்டுமே இருக்கும். இது மத்திய அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 25 சதவீதம் குறைவு. STT உயர்த்தப்படாமல் இருந்திருந்தால் அரசு இன்னும் அதிகம் வசூலித்திருக்கும் என்று நிதின் கமத் கருத்து தெரிவித்துள்ளார்.
STT 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது LTCG (Long Term Capital Gains) வரி 0% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது LTCG திரும்பி வந்துவிட்டது. STT தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று நிதின் கமத் வேதனை தெரிவித்தார்.
சந்தை பங்கேற்பாளராக தான் எப்போதும் STT குறைய வேண்டும் என்று நம்புவதாகவும், ஆனால் அது தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறினார்.
இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் வேளையில், இந்த பட்ஜெட்டில் LTCG, STCG, STT ஆகியவை குறைக்க வேண்டும் என கருத்து நிலவி வரும் வேளையில் நிதின் காமத் பதிவு வந்துள்ளது.
பல முதலீட்டாளர்கள் STT உயர்வால் F&O வர்த்தக அளவு குறைந்ததாகவும், சந்தை பங்கேற்பு பாதிக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு இந்த பட்ஜெட்டில் STT-ஐ குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் பங்குச்சந்தை தரகு நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் நிதின் காமத் தனது கருத்து சுயநலமானது என்றும் தனது பதிவில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதானது தனது ஜெரோதா நிறுவனத்தில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாலர்கள் STT குறைந்தால் அதிகம் வர்த்தகம் செய்வார்கள் இதன் மூலம் தனக்கு பயன் இருக்கும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தான் சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார். இந்த விவாதம் பட்ஜெட் 2026க்கு முன் STT குறைப்பு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது முக்கியம். STT உயர்வால் வர்த்தக செலவு அதிகரிக்கிறது. F&O வர்த்தகம் குறைவதால் சந்தை பங்கேற்பு குறையலாம். அரசு வசூல் குறைவதால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு பாதிக்கலாம். STT குறைப்பு வந்தால் வர்த்தகம் அதிகரிக்கும். முதலீட்டாளர்களுக்கு செலவு குறையும். பங்குச் சந்தை உயிர்ப்புடன் இருக்கும் என்பது தான் தற்போதை கருத்து.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications