பங்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு செயலியாக செயல்பட்டு வரக்கூடிய ஸெரோதா நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸெரோதா கேப்பிடல் மூலம் மக்களுக்கு பல்வேறு கடன்களை வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்ய இருக்கிறது.
இதற்காக ஸெரோதா நிறுவனம் தங்களுடைய வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸெரோதா கேப்பிடலில் 100-லிருந்து 125 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. ஸெரோதா கேப்பிடல் ஏற்கனவே குறைந்தபட்ச தொகையை கடனாக வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதனை மேற்கொண்டு பல்வேறு பிரிவுகளுக்கான கடன் வழங்கும் நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக 125 கோடி முதலீடு செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை கோரி இருக்கிறது, ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஸெரோதா கேப்பிடல் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் தங்களுடைய கடன் வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் என சொல்லப்படுகிறது.
ஸெரோதா கேப்பிடல் நிறுவனம் 2021ஆம் ஆண்டு முதலே கடன் வழங்கும் சேவைகளை செய்து வருகிறது. 2025 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 36 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் 12.25 கோடி ரூபாயாகவும் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஸெரோதா நிறுவனத்தின் லாபம் 7.2 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது.
தொடர்ந்து கடன் வழங்கும் பிரிவில் கவனம் செலுத்தினால் மேற்கொண்டு லாபம் அடையலாம் என ஸெரோதா தலைமை திட்டமிடுவதாகவும் இதன் காரணமாகவே வெளியிலிருந்து முதலீடுகளை திரட்டுவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இந்தியாவில் ஏஞ்சல் ஒன், குரோ ஆகிய நிறுவனங்களும் பங்கு வர்த்தகம் தாண்டி , பெர்சனல் லோன் உள்ளிட்ட பிரிவுகளில் கடன் வழங்கும் சேவைகளை தொடங்கியுள்ளன.
மக்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக தொடங்கப்பட்ட செயலிகள் பலவும் தங்களுடைய போர்ட்போலியோவை பல்வேறு துறைகளுக்கும் விரிவாக்கம் செய்கின்றன . அதில் முக்கியமாக பெர்சனல் லோன் உள்ளிட்ட கடன்களை வழங்கும் பிரிவை நோக்கி இவை முன்னேறி வருகின்றன. ஏஞ்சல் ஒன் நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய பார்ட்னர் நிறுவனங்களோடு இணைந்து இதுபோல 700 கோடி ரூபாய் வரை கடன் வழங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
ஸெரோதா கேப்பிட்டல் ஏற்கனவே 6400 பேருக்கு தங்கள் நிறுவனம் வாயிலாக கடன் வழங்கி இருப்பதாக தெரிகிறது சராசரியாக ஒவ்வொருவருக்கும் 6 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கியிருப்பதாக அதன் தலைவரான அபிலாஷ் தெரிவித்திருக்கிறார். மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவற்றை அடமானமாக வைத்து கடன் வழங்குவது என்பன உள்ளிட்ட திட்டங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications