இன்ஸ்டன்ட் வித்டிராவல் லிமிட்டை அதிகரித்த Zerodha! இனி ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!

இன்றெல்லாம் இளைஞர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். நீங்களும் ஆன்லைன் தளங்கள் வாயிலாக முதலீடு செய்பவராக இருந்தால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. இந்தியாவின் முன்னணி ப்ரோக்கரேஜ் தளமாக இருக்கும் ஜீரோதா.. பயன்படுத்தாத தொகையை டிரேடிங் அக்கவுண்டில் இருந்து வங்கி கணக்குக்கு மாற்றும் வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக மாற்றியுள்ளது.

இந்த வசதியை நீங்கள் காலை 9:00 மணி தொடங்கி மாலை 6:00 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வார இறுதி நாட்கள் மற்றும் பங்குச்சந்தை விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்னர் வரை முதலீட்டாளர்கள் பிராசசிங் டைம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தங்களுடைய பணத்தை உடனடியாக அக்கவுண்டுக்கு பெற முடியும். இதற்கு நீங்கள் எந்த வித கூடுதல் கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை.

இன்ஸ்டன்ட் வித்டிராவல் லிமிட்டை அதிகரித்த Zerodha! இனி ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!

இந்த வசதி குறித்து ஜீரோதாவின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான நிதின் காமத், தனது X பக்கத்தில் ஒரு போஸ்டை பகிர்ந்துள்ளார். "தினசரி அடிப்படையில் பணம் திரும்ப பெரும் வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக மாற்றியுள்ளோம். இனி நீங்கள் காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை மற்றும் வார இறுதி நாட்கள் சந்தை விடுமுறை நாட்கள் போன்ற நாட்களிலும் சேவையை பயன்படுத்தலாம். 2024 ஆம் ஆண்டில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியதில் இருந்து இதுவரையில் 1 லட்சம் கோடி ரூபாயை முற்றிலும் இலவசமாக வழங்கியிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Also Read

புதிய வசதி எப்படி செயல்படும்?: இதுவரையில் வாடிக்கையாளர்கள் பிராசசிங் டைம் முடிந்து தான் பணத்தை திரும்பப் பெரும் வசதி இருந்தது. ஆனால் இனி டிரேடிங் கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக வங்கி கணக்குக்கு மாற்ற முடியும். ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட எல்லா வேலை நாட்களிலும் காலை 9 தொடங்கி மாலை 6:00 மணி வரை சேவை கிடைக்கும்.

எப்படி பயன்படுத்துவது?: ஜீரோதாவின் கணக்கில் லாகின் செய்து உள்நுழைய வேண்டும். "ஃபண்ட்ஸ்" என்ற பகுதிக்கு சென்று "இன்ஸ்டன்ட் வித்டிராவல்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும், தொகையை என்டர் செய்ய வேண்டும். கன்பார்ம் ரிக்வெஸ்ட் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் இந்த வசதியை பயன்படுத்த சில நிபந்தனைகளும் உள்ளன. டிரேடிங் கணக்கில் ஒரே நாளில் டெபாசிட் செய்த பணத்தை உடனடியாக எடுக்க முடியாது. பங்குகளை வாங்குவதற்கு பெண்டிங் ஆர்டர் போட்டு வைத்திருந்தால் அந்தத் தொகை போக மீதமுள்ள தொகையை மட்டுமே எடுக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+