இந்தியாவின் பிரபலமான பங்குச்சந்தை தரகு நிறுவனமான Zerodha-வின் நிறுவனர் நிதின் காமத், திங்கட்கிழமை சமூகவலைத்தளமான டிவிட்டரில் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொண்டார். சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு "லேசான பக்கவாதத்தால்" பாதிக்கப்பட்டதைத் தனது டிவிட்டர் பாலோவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையிலும், இளம் பில்லியனர்கள் மத்தியிலும், இளம் முதலீட்டாளர்கள் மத்தியிலும் முக்கியமான முகமாக இருக்கும் Zerodha நிறுவனர் நிதின் காமத், பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். எப்போதும் பிட்னஸ் மீதும் ஆர்வமாக இருக்கும் இவருக்கு ஸ்ட்ரோக் வந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் காமத்-க்கு ஸ்ரோக் ஏற்பட்டதற்கான காரணத்தை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கலவையான காரணிகள் அதற்குப் பங்களித்திருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதின் காமத் தனது டிவிட்டர் பதிவில் சுமார் 6 வாரங்களுக்கு முன்பு, எனக்கு லேசான பக்கவாதம் (Stroke) ஏற்பட்டது. அப்பா காலமானார், மோசமான தூக்கம், சோர்வு, நீரிழப்பு மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சி இவைகளில் ஏதேனும் ஒன்று சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று X பதிவில் கூறினார்.
மேலும் நிதின் காமத் தனது பதிவில் பக்கவாதம் (Stroke) வந்த பின்பு முகம் ஒருபக்கம் தளர்ச்சி அல்லது சோர்வை கவனித்ததாகவும், அதிலிருந்து படிப்பதற்கும், எழுதுவதற்கும் கஷ்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 3-6 மாதங்களுக்குள் முழுமையாகக் குணமடைவார் என்று தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிட்னஸ் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து நிதின் காமத் சமூக ஊடகங்களில் அதிகளவில் பேசியுள்ளார். இருப்பினும், பக்கவாதம் வந்துள்ளது, இதன் மூலம் தனது பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒப்புக்கொண்டு உள்ளார்.

கடைசியில் பிட்டாகவும், உடலை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு ஏன் பக்கவாதம் வந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. மருத்துவர்கள் என்னுடைய உடற்பயிற்சி மற்றும் பிட்னஸ்-ன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தாலும், treadmillல் தொடர்ந்து பழைய அளவில் ஓடிக்கொண்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.
நிதின் காமத் மனைவி சில வருடங்களுக்கு முன்பு தான் கேன்சரில் இருந்து மீண்டு வந்தார். இந்தியாவில் இளம் தலைமுறையினரின் உடல்நலம் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு நிதின் காமத்-ம் ஒரு உதாரணமாக மாறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications