இந்தியாவின் பொருளாதாரத்தைச் சேவைத் துறையில் இருந்து உயர்த்துவதை காட்டிலும் உற்பத்தித் துறையின் வாயிலாக வேகமாக உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு பல திட்டங்களை உருவாக்கியது. இதில் முக்கியமானது PLI திட்டம், இதன் வாயிலாக அதிகளவில் பலன் அடைந்த துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி ஹார்ட்வேர் துறை நிறுவனங்கள் தான்.
இதன் வரிசையில் தற்போது ஐடி ஹார்ட்வேர் உற்பத்திக்காக இந்தியாவில் மூன்று நவீன தொழிற்சாலைகளை அமைக்க ஜெட்வெர்க் மற்றும் பெங்களூரு தலைமையிடமாகக் கொண்ட ஸ்மைல் எலக்ட்ரானிக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து அமைக்கும் மாபெரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஒப்பந்த உற்பத்தி துறையில் யூனிகார்ன் நிறுவனமாக விளங்கும் Zetwerk தனது உற்பத்தியைப் பெரிய அளவில் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த மூன்று தொழிற்சாலைகளில் முதலாவது பெங்களூரு அருகேயும், மற்ற இரண்டு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் டெஸ்க்டாப், லேப்டாப், மின்சார பயன்பாட்டை கணக்கிடும் எனர்ஜி மீட்டர்கள் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் கருவிகளை அசம்பிள், டெஸ்டிங், மற்றும் பேக்கிங் செய்ய உள்ளது.
மேலும் இந்த 3 தொழிற்சாலைகளும் அதிநவீன முறையில் இருக்கும் காரணத்தால் அசம்பிள், டெஸ்டிங், மற்றும் பேக்கிங் பணிகள் அனைத்தும் ஆட்டோமேடெட் முறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய தொழிற்சாலைகள் ஸ்மைல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரில் உள்ள அதன் தற்போதைய தொழிற்சாலை உடன் இணைந்து நான்கு தொழிற்சாலைகளாக விரிவுபடுத்த உதவும்.
இதேவேளையில் Zetwerk நிறுவனம் மொபைல் போன்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஸ்மார்ட் மீட்டர், தொலைக்காட்சி மற்றும் டிஸ்ப்ளே, hearables, wearables போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய வட இந்தியாவில் நான்கு தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. தற்போது ஜெட்வெர்க் மற்றும் ஸ்மைல் எலக்ட்ரானிக்ஸ் கூட்டணியில் தென்னிந்தியாவில் 4 தொழிற்சாலைகள் இயங்க உள்ளது.


Click it and Unblock the Notifications