சென்னை: குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு என ஒவ்வொரு பெயர் சொல்லப்படுகிறது. பூமர்கள் (Boomers), மில்லினியல்கள் (Millennials), ஜென் ஸீ (Gen Z), ஜென் எக்ஸ் (Gen X) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் எந்த பிரிவினரோடும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களை தான் (ஸில்லினியல்கள்) Zillennials என அழைக்கின்றனர்.
இந்த ஸில்லினியல்கள் எந்த ஒரு பணியிடத்திலும் தங்களை பொருத்திக் கொள்வதற்கும் குழுவாக இணைந்து செயல்படுவதற்கும் சிரமப்படுகிறார்கள் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. முதலில் ஸில்லினியல்கள் யார் என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

1997 ஆம் ஆண்டில் இருந்து 2002 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்கள் தான் ஸில்லினியல்கள் என அழைக்கப்படுகின்றனர். அதாவது மில்லினியல்களுக்கும் ஜென் ஸீக்கும் இடைப்பட்ட சந்ததியினர் தான் இந்த ஸில்லினியல்கள்.
தங்களை மில்லினியல்களாகவும் பார்க்க முடியாமல் ஜென் ஸீ-க்களாகவும் பார்க்க முடியாமல் தடுமாறுகிறார்களாம். இவர்கள் இன்டர்நெட் வளர்ச்சியடைந்த காலத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் அதிநவீன தொழில்நுட்ப மாற்றங்களை முதன் முதன்முறையாக அனுபவித்தவர்கள்.
அதாவது சோசியல் மீடியா காலத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரண்டு காலகட்டங்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறார்களாம். எனவே இரண்டு பிரிவுகளுக்குள்ளும் வருவதால் அவர்களால் எந்த ஒரு பிரிவிலும் தங்களை பொருத்திப் பார்க்க முடிவதில்லையாம்.
இதனால் அவர்கள் வேலைக்காக செல்லும்போது யாருடனும் சேர்ந்து வேலை செய்ய முடியாமல் தவிப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஸில்லினியல்களுக்கு பொதுவாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பிரச்சனை இருப்பதாக பிசினஸ் இன்சைடர் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மனநல ஆலோசகரான லாரன்ஸ் பரிமா தெரிவித்துள்ளார். இவ்வாறு எந்த சந்ததியினரிடம் சேர முடியாமல் இருப்பதே இந்த ஸில்லினியல்களுக்கு பெரிய மனச்சிக்கலை உருவாக்குகிறதாம்.
வேலைக்கு செல்லும் இடங்களில் மில்லினியல்கள் போல பக்குவமாகவும் செயல்பட முடியவில்லை, ஜென் ஸீ சந்ததியினர் போல சுதந்திரமாகவும் இருக்க முடியவில்லை என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ஸில்லினியல்கள் 2016 ஆம் ஆண்டிலிருந்து தான் படிப்பை முடித்து வேலைக்கு வந்து இருப்பார்கள்.
அவர்கள் வேலைக்கு வந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே கொரோனா பெருந்தொற்று வந்துவிட்டது. எனவே வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய பாதிப்புகளை சந்தித்தது ஸில்லினியல்கள் தான் என்கிறது இந்த ஆய்வு அறிக்கை. இதனால் வேலையில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு , அதிக போட்டியினை சந்திப்பது என பல பிரச்சனைகள் இவர்களுக்கு இருக்கிறதாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications