இந்திய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் 2023 ஆம் நிதியாண்டின் துவக்கத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டு குறித்து பல கணிப்புகள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து வருகிறது.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான ZOHO தலைவரும், நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு செய்த டிவிட்டர் பதவி ஐடி துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சம்பள உயர்வு இல்லாமல் தவிக்கும் ஐடி ஊழியர்களுக்கு இவருடைய பதிவு வயிற்றில் புளியை கரைக்கிறது என்றால் மிகையில்லை.

ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், செப்டம்பர் மாதம் அனைத்து நாடுகளிலும், அனைத்து ப்ராடெக்ட்களிலும் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதை பார்க்கிறோம். இது வருவாய் அளவிலும் இதன் தாக்கம் எதிரொலி்கிறது. சர்வதேச பொருளாதாரம் மோசமான நிலையை எட்டுகிறது என நான் நினைக்கிறேன். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது என்று பதிவு செய்துள்ளார்.
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி வருகிறது.

பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கடுமையான விலைவாசி பிரச்சனையால் மாடிக்கொண்டு உள்ளது. இதோடு சீனாவில் நுகர்வு அதிகளவில் பாதித்துள்ளது. மேலும மக்களின் கடன் அளவு உலகம் முழுக்க அதிகரித்து வருவதால் நிதி ஸ்திரதன்மையும் பாதித்துள்ளது.
இதற்கிடையில் ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் முழு ஆண்டு வருவாய் மற்றும் காலாண்டு வருவாயின் வால் ஸ்ட்ரீட் இலக்குகளை விட குறைவாக இருக்கும் என கணித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதற்கு காரணமாக அக்சென்சர் சர்வதேச அளவில் இருக்கும் பணவீக்கம் மற்றும் வட்டி விகித அழுத்தங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு வரையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்சென்சர் நிறுவனத்தின் அறிவிப்புகளும், கணிப்புகளும் இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஐ காட்டிலும் அதிகப்படியான வருமானம் ஈட்டும் அக்சென்சர் நிறுவனத்தின் போக்கு தான் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனத்திலும் இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications