சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகப் பாதிப்பு, போதுமான முதலீடுகள் பெற முடியாத நிலையில் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20000 க்கும் அதிகமான ஊழியர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு முக்கியமான விஷயத்தை இந்திய நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
FrontRow பணிநீக்கம்
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான FrontRow போதுமான முதலீடுகள் இல்லாத நிலையில் 75 சதவீதம் பேர் அதாவது 130 பேரை பணிநீக்கம் செய்துள்ளது, இதே நிறுவனம் மே மாதம் சுமார் 30 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதனால் 500 பேர் கொண்ட நிறுவனம் தற்போது வெறும் 40 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
பைஜூஸ் பணிநீக்கம்
இதே வேளையில் இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் உலகின் முன்னணி Ed-Tech ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் பைஜூஸ் லாபகரமான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகச் சுமார் 2500 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்தது.
ZOHO திட்டம்
சர்வதேச பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் நாட்டின் முன்னணி SAAS நிறுவனமாக இகுக்கும் ZOHO தனது பேலென்ஸ் ஷீட்-யை சிறப்பாகவும், மொத்த கடன் அளவை நெட்-ஜீரோ அளவில் வைக்க முயற்சி செய்வதாக அறிவித்துள்ளார் ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு.
பணிநீக்கம்
இதேவேளையில் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது என்பது கடைசியிலும் கடைசிக் கட்ட நடவடிக்கை என அறிவித்துள்ளார் ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு. ZOHO நிறுவனம் தனது 80 சதவீத வர்த்தகத்தை அமெரிக்கா, பிரிட்டன் நாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஸ்வாசம்
ஊழியர்கள் நிறுவனங்களுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நினைத்தால், முதலில் நிறுவனங்கள் தான் ஊழியர்களிடம் விஸ்வாசமாக இருக்க வேண்டும். இதேபோல் பொருளாதார மந்தநிலை காலத்தில் ஊழியர்களைத் தக்கவைக்க வேண்டியது நிறுவனங்கள் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான பணியாகும்.
புதிய ஊழியர்கள்
ஆனால் பொருளாதார மந்தநிலை போன்ற இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க ZOHO போன்ற பெரும்பாலான SAAS நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய ஊழியர்களை நியமிப்பதைக் குறைத்துள்ளது. இதேபோல் பல்வேறு செலவுகளைக் குறைத்துள்ளது.
விப்ரோ, இன்போசிஸ்
சமீபத்தில் விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்கள் ஐடி ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு உண்மையாக இல்லை என்றும், விசுவாசமாக இல்லை என்று அறிவித்து விதிமுறை மீறி ஓரே நேரத்தில் 2 நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. ஆனால் பிரஷ்ஷர்களுக்கு 10 வருடத்திற்கும் அதிகமாக அதே சம்பளம் அளிப்பது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த விஸ்வாசத்தைத் தான் நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் காட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications