தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய ப்ராடெக்ட் நிறுவனமான Zoho-வின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu), இந்தியாவின் பிராந்திய வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பட்ட முறையில் பொருளாதார வளர்ச்சி இன்ஜின் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
தன்னை ஒரு "experimental economist" என்று அழைத்துக் கொண்ட அவர், பொருளாதார வளர்ச்சி இன்ஜின் குறித்து விளக்கமாக பேசியுள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு டிவிட்டரில் செய்த பதிவை கொஞ்சம் பாருங்க.

பிராந்திய வளர்ச்சிக்கான "எக்னாமிக் இன்ஜின்" என்ற கருத்தைப் பற்றி நான் விவாதிக்க விரும்புகிறேன். இங்கு பிராந்தியம் என்பது ஒரு நகரம் அல்லது மாவட்டமாக இருக்கலாம்.
"இந்தப் பிராந்தியத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு நாம் என்ன விற்பனை செய்கிறோம்? நாம் உலகின் பிற பகுதிகளில் இருந்து வாங்கும் பொருட்களுடன் சமநிலைபடுத்த எது தேவை?" என்று நான் எப்போதும் என்னுள் கேட்கும் கேள்வியாக இருக்கும். நாம் பிராந்தியத்திலிருந்து விற்பனை செய்யும் பொருட்களே பொருளாதார ஊக்கி அதாவது எக்னாமிக் இன்ஜின் ஆகும்.
இப்போது, அந்த பொருளாதார ஊக்கி-யின் வருவாயைக் கொண்டு, "பிராந்தியத்தில் மதிப்பு கூட்டுதல்" (value added in the region) என்பதைக் கவனிக்க வேண்டும். இதில் பிராந்திய மக்களுக்குக் கிடைக்கும் ஊதியம் மற்றும் லாபம் அனைத்தும் அடங்கும்.
இப்போது பிராந்திய செழிப்பு என்பது மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடியது: நமது "பொருளாதார ஊக்கி" மூலம் ஒரு நபருக்கு சேர்க்கப்படும் மதிப்பு என்ன? அந்த அளவீடு அதிகமாக இருந்தால், நம்மிடம் செழிப்பான பிராந்திய பொருளாதாரம் உள்ளது என்பது பொருள் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். இது கிட்டத்தட்ட நாடு அளவில் கணக்கிடப்படும் per capita income-க்கு இணையானவை.
இன்று, இந்தியாவில் உள்ள ஒரு சிறிய மாவட்டம் கூட, அதன் பொருளாதார ஊக்கிகளில் தலா ஒரு நபருக்கு 1000 டாலர் மதிப்பு சேர்க்கப்பட்டாலும், அது செழிப்பானதாக இருக்கும். இது "பிராந்தியம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு" என்பதற்கான அளவீடாக இருக்கும்.
உதாரணமாக, Zoho நிறுவனம், தென்காசி பகுதிக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் பொருளாதார மதிப்பைக் கொண்டு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 14 லட்சம் என்றால், Zoho நிறுவனத்தின் பிராந்திய செழிப்பிற்கான பங்களிப்பு, மாவட்ட அளவில் தலா நபருக்கு சுமார் ₹70 ஆக இருக்கும்.
இந்தியா முழுவதும் உள்ள 800க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் இதுபோன்ற பொருளாதார ஊக்கிகள் தேவை. சீரான பிராந்திய வளர்ச்சிக்கு இதுவே முக்கியக் காரணியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
Zoho நிறுவனம், தென்காசி மாவட்டத்தில் ஆண்டுக்கு 300-400 மில்லியன் டாலர் மதிப்பு சேர்க்க முடிந்தால், அந்தப் பகுதி கணிசமான செழிப்பைக் காணும். நிச்சயமாக, இதோடு பிற துறை வாய்ப்புகளும், வளர்ச்சி வாய்ப்புகளும் உருவாகும் இது multiplier effect-ஐ உருவாக்கும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
இதை சிறிய கிராமப்புற மாவட்டத்தில் செய்திட நான் முயற்சிக்கிறேன், இதன் மூலம் நான் ஒரு experimental economist என நம்புகிறேன் என தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications