கேரளா: கேரள அரசு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினாலே போதும் நாட்டின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சியை அடையும் என ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரி யூனியர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் எஸ்எஃப்ஐ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர். 448 கல்லூரி யூனியன் தேர்தல்களில் 320 யூனியன் தேர்தல்கள் எஸ்எஃப்ஐ அமைப்பினர் தான் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சுட்டிக்காட்டி கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான தாமஸ் ஐசக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் கேரள மாநில கல்லூரிகளில் இடதுசாரி புயல் வீசுகிறது என கூறியுள்ளார். தாமஸ் ஐசக்கின் இந்த எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் கேரளாவை விரும்பும் ஒரு நபராக நான் இதை கூறுகிறேன், இந்த ஒரு விஷயத்தை செய்தால் கேரள மாநில பொருளாதாரம் தைவான் நாட்டு பொருளாதாரத்துக்கு ஈடாக வளர்ச்சியடை முடியும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக கேரள மாநிலத்திற்கு உள்ளேயே வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த பலரும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வது அதிகம். ஐடி உள்ளிட்ட துறைகளில் படிப்பை முடித்தவர்கள் இந்தியாவிலேயே பெங்களூரு, சென்னை, புனே ஆகிய நகரங்களுக்கு செல்கின்றனர்.
இந்த சூழலில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவை சேர்ந்த திறமை வாய்ந்த இளைஞர்கள் பலரும் தங்களுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேறு நாடுகளுக்கும் வேறு மாநிலங்களுக்கும் வேலைவாய்ப்பை தேடி சென்று விடுகின்றனர், எனவே கேரள மாநிலத்திற்கு உள்ளேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி புதிய தொழில்களை தொடங்குவதற்கான சூழலை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
கேரள அரசு இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தாலே கேரள மாநிலத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனக் கூறியுள்ளார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சுய தொழில் தொடங்குவதற்குமான உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அரசுகளின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
சீன பொதுவுடைமை கட்சியின் தலைவராக இருந்த Deng Xiaoping இன் செயல்பாடுகளை படிக்கும் போது இது தொடர்பான விரிவான பார்வை நமக்கு கிடைக்கும் என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். மேலும் சிங்கப்பூரை உருவாக்கிய Lee Kuan Yewஐ படிக்க வேண்டும் என்பதையும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications