இந்தியாவின் முன்னணி SAAS நிறுவனமான ZOHO தலைவர் லாக்டவுன் காலக்கட்டத்தில் பெரு நிறுவனங்கள் அனைத்தும் சிறிய நகரங்களுக்கு தங்களுடைய தலைமையகத்தை மாற்ற வேண்டும் என்றும், கிராமங்களில் வேலைவாய்ப்புகள், வர்த்தகத்தை உருவா்க்க வேண்டும் என கூறியது காட்டுத்தீ போல பரவி தற்போது அனைத்து துறைகளையும் தொத்திக்கொண்டது.
இதில் ஒரு படிக்கு மேல் சென்ற ZOHO சிஇஓ மற்றும் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தனது சிஇஓ அலுவலகத்தை தனது சொந்த ஊரான தென்காசிக்கு மாற்றியது மட்டும் அல்லாமல் தென்காசியில் புதிய ZOHO கிளை அலுவலகத்தையும் திறந்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் தென்காசியில் ஸ்ரீதர் வேம்பு ஆடம்பர வாழ்க்கை இல்லாமல் எளிமையான வாழ்க்கையை மட்டும் அல்லாமல் இயற்கையோடு நெருங்கி வாழ்ந்து வருகிறது. பல நேரம் செருப்பு கூட இல்லாமல் நடக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளார் ZOHO சிஇஓ மற்றும் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு.
இவருடைய வாழ்க்கை முறை குறித்து பலரும் விமர்சனம் செய்தாலும், பல மூத்த அதிகாரிகளும், தலைவர்களும் இத்தகைய இயற்கை உடன் ஓன்றிணைந்து வாழும் முறைக்கு மெல்ல மெல்ல நகர துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி கோவிந்தபெரி கிராமத்தில் அமைந்திருக்கும் ZOHO நிறுவனத்தின் கிராம பள்ளி, விவசாயம பகுதிகளை காண சென்றுள்ளார். இவரை வரவேற்ற ஸ்ரீதர் வேம்பு அனைத்து இடத்திற்கும் அவருடைய சொந்த எலக்ட்ரிக் ஆட்டோவில், அவரே ஓட்டி அழைத்து சென்றார். இந்த புகைப்படம் தற்போது பெரிய அளவில் சமுக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டரில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கோவிந்தபெரி கிராமத்தில் இருக்கும் எங்களுடைய தோட்டம் மற்றும் பள்ளியை காண வந்தார். எங்களுடைய விவசாய முயற்சிகளையும், எங்களுடைய விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் பேசினார். அவரை என்னுடைய எலக்ட்ரிக் ஆட்டோ-வில் அழைத்து சென்றது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

கிராமங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், மக்கள் பெரு நகரங்களுக்கு செல்வதை குறைக்கவும், அதீத மக்கள் தொகையால் மூச்சு திணறும் நகரங்களுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும் என நம்புபவர் ஸ்ரீதர் வேம்பு. இதனாலேயே தான் தனது சிஇஓ அலுவலகத்தை தனது சொந்த ஊருக்கும், தென்காசியில் புதிய ZOHO கிளை அலுவலகத்தையும் திறந்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications