முதலீட்டாளர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லும் ஸ்ரீதர் வேம்பு.. மக்களுக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!

ஜோஹோ கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சமீபத்தில் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான மெசேஜை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்கள் அதையே முதன்மை நோக்கமாக வைத்திருக்காமல், தங்களுடைய திறன்களை மேம்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் பதிவு அமைந்துள்ளது.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் பதிவில் ஸ்ரீதர் வேம்பு "பங்குச் சந்தை மதிப்பை செல்வமாக நினைக்கிறோம். உண்மையான செல்வம் திறன்களில் தான் உள்ளது. உண்மையான செல்வம் நம் சொந்த பிரச்சனைகளை தீர்க்கும் திறன், பெரிய விஷயங்களைச் செய்யும் திறன் தான். பங்குச் சந்தை ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் அவை முதன்மை இலக்காக மாறக்கூடாது. நாம் அதை நம் முதன்மை இலக்காக மாற்றிக் கொள்ளும்போது, ​​உண்மையில் முக்கியமானதை நாம் மறந்துவிடுகிறோம்". என்று தனது எக்ஸ் பதிவில் போஸ்ட் செய்துள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லும் ஸ்ரீதர் வேம்பு.. மக்களுக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!

எப்போதுமே எளிமையான வாழ்க்கை வாழும் ஸ்ரீதர் வேம்பு, அவ்வப்போது ஊழியர்களின் சில பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர். மக்களை விட லாபத்தை முதன்மையாக பார்க்கும் ஒர்க் கலாச்சாரம் குறித்தும் பேசுபவர். PTI-க்கு அவர் அளித்த முந்தைய பேட்டியில் மன அழுத்தம் மிகுந்த வேலைச் சூழலை பிரஷர் குக்கருடன் ஒப்பிட்டு பேசியிருப்பார். இத்தகைய வேலை சூழல் ஊழியர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறியிருப்பார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு சிறு வயது முதல் கல்வி கற்பதில் ஆர்வமாக இருந்த ஒருவர். IIT நடத்தும் JEE தேர்வில் உலக அளவில் 27-வது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு 1994-ஆம் ஆண்டு வரை குவால்காம் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார் 1990-களில் ஸ்ரீதர் வேம்பு தான் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்தில் கிடைத்த ஊதியத்தை விட்டு வெளியேறினார்.

1996-ஆம் ஆண்டு Advent ஐடி நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது டெலிகாம் ப்ரோ வைடர்களுக்கு சாப்ட்வேர் விற்பனை செய்யப்பட்டது 1998 ஆம் ஆண்டு Advent நிறுவனம் ரூ.6 கோடி விற்பனையை எட்டியது அதன் பின் நிறுவனம் தொடர்ந்து முன்னேறியது.

முதலீட்டாளர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லும் ஸ்ரீதர் வேம்பு.. மக்களுக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!

அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக தனது வாடிக்கையாளர்களை இழந்த அட்வென்ட் நிறுவனம் தொடர்ந்து தன்னை சந்தையில் தக்க வைத்துக் கொள்ளப் போராடியது. அப்போது ரூ.150 கோடிக்கு அந்த நிறுவனத்தை வாங்க பலர் முன் வந்தாலும் ஸ்ரீதர் வேம்பு அதை ஏற்க வில்லை. தனக்கு கூட சம்பளம் வாங்காமல் தொடர்ந்து போராடி ஒரு நிறுவனத்திடம் இருந்து ஜோஹோ என்ற டொமைன் பெயரை வாங்கி 2009-ஆம் ஆண்டில் அட்வென்ட் நிறுவனத்தை ஜோஹோ கார்ப்பரேஷனாக மாற்றினார்.

ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ கார்ப்பரேஷன் மூலம் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார். 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஃபோர்ப்ஸ் இந்தியாவில் 55 வது பணக்காரராக தரவரிசைப்படுத்தப்பட்டார், இவருடைய நிகர மதிப்பு $3.75 பில்லியன். அதே ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+