இந்திய டெக் சந்தையில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவாக்கப்பட்டு இன்று மாபெரும் பிராடெக்ட் நிறுவனமாக உருவெடுத்துள்ள Zoho Corporation, தமிழ்நாட்டில் தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்பதில் அனைவருக்கும் பெருமை.
உலகம் முழுவதும் இருக்கும் டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த 1.5 வருடமாக டெக் ஊழியர்களை கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம் செய்து வரும் வேளையில் Zoho Corporation தலைவர் ஸ்ரீதர் வேம்பு, ஊழியர்களை பணிநீக்கம் செய்வது என்பது கடைசிக்கட்ட நடவடிக்கை என்ற முக்கியமான காலக்கட்டத்தில் அறிவித்து ZOHO ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்தார்.

இதேவேளையில் Zoho Corporation தனது வர்த்தகம், சேவை, வாடிக்கையாளர்களை அதிகரிக்க பணியாற்றி வந்த நிலையில் Zoho தலைவர் தனது சிஇஓ அலுவலகத்தை சென்னையில் இருந்து தென்காசியில் தான் குழந்தை பருவத்தில் வளர்ந்த இடத்திற்கு மாற்றினார்.
இதோடு நிற்காமல் இந்தியா கிராமங்களில் பெரும் வேலைவாய்ப்பு மற்றும் திறமைகளை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய திட்டத்துடன் ZOHO CORP தமிழ்நாட்டில் தென்காசியிலும், ஆந்திராவில் ரேனிகுண்டா பகுதியிலும் திறந்து பெரும் மாற்றத்தை உருவாக்கினார். இதற்கு பின்பு தான் பல முன்னணி நிறுவனங்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு தங்களுடைய அலுவலகத்தை திறக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 2 வருடத்திற்கு மேலாக Estancia IT Park-ல் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத்தின் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது, இதுவரையில் இந்தியாவில் எந்தொரு ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்கள் செய்யாத வரையில் அலுவலகம் மொத்தத்தையும் ஐரோப்பிய ஸ்டைலில் கட்டப்பட்டு வருகிறது.
இப்புதிய அலுவலகத்தை பார்க்க அலுவலகம் போல் இல்லை, ஒரு மாளிகை அல்லது ஒரு ஆடம்பர ஆப்பார்ட்மென்ட் கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. Zoho Corp புதிய கட்டத்தின் அதிகாரப்பூர்வ போட்டோவை வெளியிடாத நிலையில் டிவிட்டரில் அக்ஷய் என்பவர் டிவீட் செய்த புகைப்படத்தை சென்னை அப்டேட்ஸ் பகிர்ந்துள்ளது.

இந்த Estancia IT Parkல் இருக்கும் Zoho நிறுவனத்தின் தலைமையகம் ஏற்கனவே சிறப்பான வடிவத்தில் சென்னை கட்டிடங்களின் முக்கிய அடையாளமாக இருக்கிறது, இந்த நிலையில் இதே போன்ற தாக்கத்தை ஐரோப்பியா மாடலில் கட்டப்பட்ட புதிய zoho அலுவலகம் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications