எல்லாரும் வீட்ல இருந்து வேலை பாருங்க.. சோஹோ கார்ப்ரேஷன் முன்னெச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கொரோனா வைரஸ் சுமாராக 72 உலக நாடுகளில் பரவிக் கொண்டு இருக்கிறது.

 

இந்த வைரஸால் பல நிறுவனங்களும் தங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்க முடியாமல், தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள்.

Work From Home

Work From Home

வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கும் வசதியைத் தான் நாம் ஆங்கிலத்தில் Work from home என்போம். இந்த வசதியை ட்விட்டர் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் கூட செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. தற்போது இந்த பட்டியலில் இந்தியாவின் சோஹோ கார்ப்பரேஷன் இணைந்து இருக்கிறது.

சோஹோ நிறுவனம்

சோஹோ நிறுவனம்

கொரோன வைரஸ் பரவலுக்கு முன் எச்சரிக்கையாக, உலகம் முழுக்க இருக்கும் அனைத்து அலுவலகங்களிலும் வேலை பார்க்கும் ஊழியர்களை, வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறோம். எங்கள் அலுவலகத்தில் இதுவரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை எனச் சொல்லி இருக்கிறார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி இ ஓ ஸ்ரீதர் வேம்பு.

தொடரும்
 

தொடரும்

மிக தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும், ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரலாம் என சோஹோ கம்பெனியினர் தங்கள் ஊழியர்களுக்குச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை குறையும் வரை தொடர்ந்து தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்த படியே வேலை செய்யச் சொல்ல இருக்கிறார்களாம்.

நாடுகள்

நாடுகள்

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், சோஹோ நிறுவனத்துக்கு பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, ஸ்வீடன், ஜெர்மனி என பல நாடுகளில் அலுவலகங்கள் இருக்கிறதாம். ஒட்டு மொத்தமாக அனைத்து நாடுகளில் இருக்கும் சோஹோ அலுவலகங்களிலும் சுமார் 7,500 ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

வீட்டில் இருந்த படியே வேலை என்றால் ஜாலியாகத் தான் இருக்கும். நாம் வேலை பார்க்கும் அலுவலகங்களும், இப்படி விட்டில் இருந்தே வேலை பார்க்க ஓகே சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும். நடக்குமா எனக் கேள்வி கேட்டால் தெரியாது. ஆனால் நடந்தால் நன்றாக இருக்குமே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zoho Corporation company announced work from home to all global employees

The Chennai headquartered Zoho Corporation company announced work from home to all its global employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X