இந்திய தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் நிதியுதவி அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்தியா வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்தியாவின் பொருளாதார நிலை குறித்தும் அதனை மேம்படுத்துவதற்கான தன்னுடைய யோசனை குறித்தும் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் இந்தியா மறுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக பைடன் தலைமையிலான நிர்வாகம் 21 மில்லியன் டாலரை வழங்கியது ஏன்? அவர்கள் அங்கே வேறு யாரோ தேர்வாக வேண்டும் என்பதற்காக இந்த பணத்தை கொடுத்திருக்கலாம் என நான் யூகிக்கிறேன் என அதிபர் டிரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசினார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஸ்ரீதர் வேம்பு "இந்தியா வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அனைத்து வகையான நிதிகளையும் மறுக்க வேண்டும், இந்தியா கொள்கை அளவிலேயே இந்த முடிவினை எடுக்க வேண்டும். இந்தக் கொள்கை அமெரிக்க மற்றும் மேற்கத்திய வரி செலுத்துவோருக்கும் நல்லது" என கூறியுள்ளார்.
முன்னதாக எதிர்கால முதலீட்டு முயற்சி என்ற தலைப்பில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், நிதி ரீதியாக இந்தியா வலுவான நாடாக இருக்கிறது, உலகிலேயே வெளிநாட்டுப் பொருட்களுக்கு அதிக அளவில் வரிவிதிக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது என குறிப்பிட்டார். அப்படி இருக்கும் போது பைடன் நிர்வாகம் ஏன் 21 மில்லியன் டாலர்களை தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கியது என கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு செயல் திறன் துறை சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்படும் பல்வேறு நிதி திட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. நேபாளம் , வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் பெயரும் இதில் இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக 21 மில்லியன் டாலர்கள் என ஒதுக்கப்பட்டு இருந்த நிதியையும் ரத்து செய்வதாக அரசு செயல் திறன் துறை குறிப்பிட்டிருந்தது. இதை தான் டொனால்ட் டிரம்பும் குறிப்பிட்டு பேசி இருந்தார். இந்தியாவிலும் தற்போது இது வார்த்தை மோதல்களுக்கு வித்திட்டுள்ளது. அமெரிக்க டாலர் 21 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய ரூபாயில் 182 கோடி ரூபாய் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications