22 சதவீத வருவாய் அதிகரிப்பு இருந்துமா பணி நீக்கம்.. நிறுவனத்தை சாடிய ஸ்ரீதர் வேம்பு!

ஃப்ரெஷ்வொர்க்ஸ் என்ற நிறுவனம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் 660 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. வெளியான இந்த அறிவிப்புக்கு ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். வருவாய் அதிகரித்தாலும் பணி நீக்கம் செய்வது அமெரிக்க நிறுவன உலகில் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. தற்போது இந்த நடைமுறை இந்தியாவிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளது என்று தனது அதிருப்தியை ஸ்ரீதர் வேம்பு வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னையை தளமாகக் கொண்ட ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் 22 சதவீத வருவாய் அதிகரிப்பை சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால் வருவாய் அதிகரிப்பு இருந்தாலும், அதன் பணியாளர்களில் 13 சதவீதத்தை குறைத்துள்ளது. நிறுவனத்தின் பெயரை நேரடியாக பெயரிட்டு சொல்லவில்லை என்றாலும், அதிக லாபம் மற்றும் பண இருப்புகளை பராமரிக்கும் நிறுவனங்களே தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது சரியானதாக இல்லை என்று ஸ்ரீதர் வேம்பு கடுமையாக சாடியுள்ளார்.

 22 சதவீத வருவாய் அதிகரிப்பு இருந்துமா பணி நீக்கம்.. நிறுவனத்தை சாடிய ஸ்ரீதர் வேம்பு!

"ஒரு நிறுவனம் $1 பில்லியன் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் 20% வருவாய் அதிகரிப்புடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனமே 12 முதல் 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது போன்ற நிறுவனங்கள் ஊழியர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க கூடாது" என பணிநீக்கம் குறித்த தனது கவலையை ஸ்ரீதர் வேம்பு அவருடைய அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் $400 மில்லியன் மதிப்பிலான தனது சொந்த பங்குகளை வாங்கிக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனையும் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார். நீங்கள் நியமித்த ஊழியர்களைப் பயன்படுத்தி 400 மில்லியன் டாலரை முதலீடு செய்யும் தொலைநோக்குப் பார்வை உங்களிடம் இல்லையா? என்ற கேள்விகளையும் முன்வைத்து பதிவிட்டிருந்தார்.

ஸ்ரீதர் வெம்பு, ஜோஹோ நிறுவனம் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினர். "நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம். பங்குதாரர்கள் கடைசியாக தான் வர வேண்டும். அதோடு பங்குதாரர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவது ஊழியர்களின் நலனை பாதிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு வேலையிடத்தில் "யூஸ் அண்ட் த்ரோ" பாலிசியை பயன்படுத்துவது குறித்தும் விமர்சனங்களை முன் வைத்தார். ஒருபோதும் ஊழியர்கள் அப்படி நடத்தப்படுவதை விரும்புவதில்லை என்றும், ஊழியர்களின் விசுவாசத்தை பலி கொடுத்து குறுகிய கால லாபங்களை நிறுவனங்கள் பார்க்க கூடாது. இது சமூக ரீதியாக நிலையற்றது என்றும் விமர்சித்தார். இது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களிடையே சந்தேகத்தையும் ஆழமான பிளவுகளையும் வளர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+