செயற்கை நுண்ணறிவு (AI) பல வேலைகளை மாற்றிவிடும் அல்லது நீக்கிவிடும் என்ற அச்சம் உலகெங்கும் பரவி வரும் நிலையில், Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒரு முக்கியமான கருத்தை X-இல் பகிர்ந்துள்ளார். AI பல தொழில்களை ஆட்டிப் படைத்தாலும், மனிதர்களின் சுயமதிப்பு, பணம் சாராமல் இருக்கும் பணிகள் என்றென்றும் நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நமது சுயமதிப்பு நாம் சேர்க்கும் பொருளாதார மதிப்பிலிருந்து வருகிறது என்றால், அல்லது நமது அறிவாற்றல் மூலம் வருகிறது என்றால், AI நமது சுயமதிப்புக்கு பெரும் சவாலாக இருக்கும்" என்று ஸ்ரீதர் வேம்பு தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்துக்காக செய்யப்படாத பல வேலைகள் AI-யால் பாதிக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

உதாரணமாக குழந்தைகளை பராமரிப்பது, குழந்தைகளுக்கு கற்பிப்பது, முதியோரை பராமரிப்பது, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு விவசாயத்துக்கு திரும்புவது, காட்டில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றுவது, கோயில் பூசாரிகள் யாரும் வராவிட்டாலும் தினசரி சடங்குகளை செய்வது, கிளாசிக்கல் இசைக் கலைஞர்கள் தினமும் பயிற்சி செய்து சிறிய எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருந்தாலும் கச்சேரி நடத்துவது போன்றவை பணத்துக்காக செய்யப்படுவதில்லை என்று அவர் எடுத்துக்காட்டாக கூறுகிறார். இத்தகைய பணிகளைச் செய்பவர்கள் AI-யால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார்.
மனிதர்கள் எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை மையமாகக் கொண்டு வாழலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். பணத்தால் அளக்க முடியாத மதிப்பு கொண்ட பணிகள் மனித இயல்போடு பின்னிப்பிணைந்தவை என்பதால், அவை AI-யால் மாற்றப்பட முடியாது என்று அவர் வலியுறுத்துகிறார்.
மொத்தத்தில், ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்து AI-யின் எல்லைகளை தெளிவுபடுத்தும் வகையில் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்கருத்துக்கள் இருந்து வருகிறது. பணம் சார்ந்த வேலைகள் மாறலாம், ஆனால் மனித இயல்போடு இணைந்த பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என்பதே ஸ்ரீதர் வேம்பு கருத்து.
இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் பலரும் விவாதம் நடத்தி வருகின்றனர்.
சிலர் இதை வெறும் கற்பனை என்று விமர்சித்தனர்.
வினோத் என்பவர், "இளைஞர்களை குறைந்த மதிப்பு சேர்க்கும் வேலைகளை செய்யச் சொல்வது முரண்பாடு அல்லவா? நீங்கள் உலக வாடிக்கையாளர்களுக்கு AI சேவை அளித்து டாலரில் சம்பாதித்து ரூபாயில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்பினார்.
விஷ்ணு அகர்வால் என்ற பயனர், "பணம் சார்ந்த பொருளாதாரம் இல்லாமல் பேஷன் சார்ந்த பணிகள் நீடிக்க முடியாது. ரெனசான்ஸ் ஃப்ளோரன்ஸ் பாருங்கள் - மெடிசி வங்கி குடும்பத்தின் பெரும் செல்வம் தான் அந்த கலைஞர்கள், இசைக்கலைஞர்களை ஆதரித்தது. AI நமது முதன்மை பொருளாதார இயந்திரங்களை சிதைத்தால், அந்த ஆதரவு செல்வம் மறைந்துவிடும்" என்று விமர்சனம் செய்தார்.
சாலிக் ஷா என்ற பயனர், "உலகம் இன்னும் முழுமையடையவில்லை. நகரங்களை மீண்டும் கட்டமைக்கலாம், புதிய பிரச்சினைகளுக்கு புதிய வேலைகள் உருவாகும். முன்பு விலை அதிகம் அல்லது மாற்று வழி இல்லாத பிரச்சினைகளை இப்போது தீர்க்கலாம்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
மொத்தத்தில், ஸ்ரீதர் வெம்புவின் கருத்து சிலருக்கு ஆறுதலாகவும், சிலருக்கு முரண்பாடாகவும் தோன்றியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications