ஜெனரேட்டிவ் ஏஐ செயலிகளின் பயன்பாடு நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டன . சாட் ஜிபிடி, ஜெமினி ஏஐ, பெர்பிளெக்சிட்டி, கிராக் என பல்வேறு ஜெனரேட்டிவ் செயலிகளும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஏஐ செயலிகளின் பயன்பாடு குறித்து ஜோஹோ நிறுவன ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டு இருக்கும் பதிவு கவனம் பெற்று இருக்கிறது. ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் நான் தினந்தோறும் ஏஐ செயலிகளை பயன்படுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறையாவது இந்த செயலிகளை நான் பயன்படுத்துகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

சாட் ஜிபிடி, கிளாட், ஜெமினி ஏஐ, பெர்பிளெக்சிட்டி, கிராக் மற்றும் டீப் சீக் ஆகிய முன்னணி ஏஐ கருவிகளை எல்லாம் நான் பயன்படுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார் . ஏஐ கருவிகள் பல்வேறு விஷயங்களை நான் வேகமாக கற்றுக்கொள்ள எனக்கு உதவுகிறது என தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் பாரம்பரிய தேடு பொறிகளுடன் ஒப்பிடும்போது எனக்கு ஏஐ கருவிகள் தான் மிகவும் உதவியாக இருக்கிறது எனக் கூறியிருக்கும் அவர் நான் எனக்கு தேவையான விஷயங்களை தேடுபொறிகளில் சென்று தேடுவது கிடையாது கிட்டத்தட்ட 80 சதவீதம் நான் அதை குறைத்துக் கொண்டேன் எனக்கு தேவைப்படும் தகவல்களை ஏஐ கருவிகள் மூலமாக தான் தெரிந்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.
மேலும் உங்களுக்கான ஒரு மிகச்சிறந்த விவாத பார்ட்னராக ஏஐ செயலிகளால் இயங்க முடியும் என குறிப்பிட்டு இருக்கும் அவர் நான் ஒரு ஏஐ செயலியிடம் ஒரு குறிப்பிட்ட கருத்தை கேட்பேன். அதனை மற்றொரு ஏஐ செயலியிடம் உள்ளீடு செய்து அதை விமர்சனம் செய்ய சொல்லுவேன் இதன் மூலம் பல்வேறு விஷயங்களும் தொடர்பான ஆழமான புரிதல் எனக்கு ஏற்படுகிறது என ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஏஐ உதவியால் பல சேவைகளின் அனுபவத்தையும் மேம்படுத்த முடியும் எனக் கூறியிருக்கும் அவர் எக்ஸ் தளத்தில் கிராக்கின் செயல்பாட்டை ஒரு உதாரணமாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் ஒருபோதும் ஏஐ கொண்டு நான் கண்டெண்ட் உருவாக்க மாட்டேன் என தெரிவித்திருக்கும் அவர் ஏஐ கருவிகளை நாம் கஸ்டமர்ஸ் சப்போர்ட் ஏஜெண்டுகளுக்கு உதவியாக பயன்படுத்தினால் வேலைகள் வேகமாக முடியும் என்கிறார்.
ஆனால் அதற்காக ஏஐ கொண்டு மனிதர்களை இந்த வேலையில் இருந்து நீக்க கூடாது, ஏஐ செயலியை உதவியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார். மேலும் ஏஐ உருவாக்கும் கோடிங்கை மனிதர்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார் எந்த ஒரு ப்ரோக்ராமரும் ஏஐ உருவாக்கப்பட்ட கோடினை முழுமையாக ஆய்வு செய்யாமல் அப்படியே பயன்படுகிறார் என்றால் அவர் தன்னுடைய வேலையில் தோல்வி அடைந்து விட்டார் என்று தான் அர்த்தம் என கூறியிருக்கிறார்.
ப்ரோக்ராமர்கள் தொடர்ந்து ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என நான் அறிவுறுத்துகிறேன், நானும் தொடர்ச்சியாக ஏஐ கருவிகளை பயன்படுத்த போகிறேன். அதன் மூலம் என்னுடைய அனுபவம் எப்படி மாறுகிறது என்பதை தொடர்ச்சியாக பதிவிடுகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவில் பலரும் தாங்கள் எப்படி ஏஐ செயலிகளை பயன்படுத்துகிறோம் தங்களுடைய வேலையும் செயல் திறன்களையும் மேம்படுத்துகிறோம் என்பது குறித்து கருத்து பதிவிட்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications