சோஹோ ஸ்ரீதர் வேம்பு வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்கள் மென்பொருள் தொடர்பான வேலைகளுக்கு ஆபத்தாக அமைந்திருக்கின்றன என தெரிவித்திருக்கிறார். சோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு அவ்வப்போது ஐடி துறை தற்போதைய நிலவரம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்கள் சாப்ட்வேர் வேலைகளுக்கு பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்றன எனக் கூறியிருக்கிறார். தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் அதிக சம்பளம் பெறுபவர்களாக மென்பொருள் துறை நிபுணர்களே இருக்கின்றனர். ஆனால் இந்த நிலை இப்படியே இருக்காது என தெரிவித்திருக்கிறார். லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் மற்றும் நவீன மேம்பாட்டு கருவிகள் உலக அளவில் பல்வேறு மென்பொருள் சார்ந்த வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் என்ற எச்சரிக்கையை அவர் முன் வைத்திருக்கிறார்.

தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியர் , சிவில் இன்ஜினியர் , மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை விட எல்லாம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் அதிக சம்பளம் பெறுகிறார்கள், ஆனால் ஆனால் இது இப்படியே நீடிக்காது எனக் கூறியிருக்கிறார். நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடைய தயாரிப்புகளுக்கு பணம் செலுத்துகிறார்கள் என்றால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்திருக்கிறார்.
தற்போது மென்பொருள் மேம்பாடுகளில் லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் மற்றும் புதிய ஏஐ கருவிகள் இணைந்து ஒரு புரட்சி உருவாகி வருகிறது. இந்த புரட்சியானது அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் சார்ந்த வேலை வாய்ப்புகளை அழிக்கும் தன்மை கொண்டது என கூறி இருக்கிறார். ஏற்கனவே பல்வேறு பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய நிறுவனங்களின் பெரும்பாலான பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடமே வழங்க தொடங்கிவிட்டன.
கூகுள் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ தொழில்நுட்பங்களிடம் கொடுத்துவிட்டு அந்த பணியில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்து விட்டன. ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச்ஆர் வேலைகளை கூட ஏஐ தொழில்நுட்பங்களிடமே வழங்கி விட்டன. தற்போது உலக அளவில் மென்பொருள் துறை மிகப் பெரிய மாற்றங்களை கண்டு வருகிறது.
ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் இதுநாள் வரை திரும்பத் திரும்ப செய்து வந்த ஒரே மாதிரியான வேலைகளை மனிதர்களை விட அதிக செயல் திறனுடன் செய்யத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோன வண்ணம் இருக்கின்றன இதை உரக்க கூறும் வகையில் தான் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் பிபிஓ துறைகளில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வேலைகளை பறித்து விட்டது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications