தமிழ்நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஐடி சேவை நிறுவனமான சோஹோ , இந்தியாவில் தங்களுக்கு சொந்தமாக செமி கண்டக்டர் ஃபேப் ஆலையை திறக்க இருப்பதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போதைக்கு அந்த திட்டத்தை கைவிடுவதாக திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு இந்த தொழில்நுட்பத்தில் எங்கள் மீது எங்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை என பதிவு செய்திருக்கிறார்.
சோஹோ நிறுவனம் 700 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் சிப் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு இருந்தது. இதற்காக சில ஊழியர்களையும் பணிக்கு அமர்த்தியது, சிப் தயாரிப்பதற்கான பணிகளை மேற்பார்வையிட ஒரு குழுவையும் நியமனம் செய்தது. ஆனால் தற்போது திடீரென அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, இந்த தொழிலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது குறிப்பாக இதற்கு அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதால் மக்களின் வரிப்பணத்தை எடுத்து பயன்படுவதற்கு முன்பாக இந்த தொழில்நுட்பம் குறித்து உறுதியாக நாம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

தற்போதைக்கு எங்களுக்கு இந்த தொழில்நுட்பம் மீது முழுமையான புரிதல் இருப்பதாக நம்பிக்கை இல்லை என்பதால் ஒரு சிறந்த தொழில்நுட்ப அணுகு முறையை கண்டுபிடிக்கும் வரை இந்த யோசனையை கைவிடலாம் என எங்களுடைய நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்து இருக்கிறது என அதில் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போதைக்கு இந்த திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு மீண்டும் எப்பொழுது இந்த திட்டத்தை கையில் எடுப்போம் என்பதற்கு குறித்த கால அளவை பகிரவில்லை .
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி சேவை நிறுவனமாக இருக்கிறது சோஹோ. 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் மென்பொருள் மற்றும் ஐடி சேவைகளை வழங்கி வருகிறது. சந்தா அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றனர் 120 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கிறது.
முன்னதாக கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனமும் இஸ்ரேலை சேர்ந்த டவர் செமி கண்டக்டர் நிறுவனத்தோடு இணைந்து சிப் உற்பத்தியில் ஈடுபடுவதாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. பத்து பில்லியன் டாலர்கள் முதலீட்டில் இந்த சிப் உற்பத்தி ஆலை நிறுவப்படும் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென கௌதம் அதானியின் நிறுவனம் அந்த பேச்சுவார்த்தையை கைவிட்டு இருக்கிறது.
உலக அளவில் தற்போது செமி கண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்தியாவை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. இதற்காக செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை நிறுவும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் டாடா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய செமி கண்டக்டர் ஆலைகளை நிறுவியிருக்கின்ற. வியட்நாம் நாட்டை சேர்ந்த நிறுவனங்களோடு கூட்டமைப்பு செய்து இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட தொடங்கி இருக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications