சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் மாபெரும் SAAS சாம்பாஜ்ஜியமாக விளங்குகிறது ZOHO. 1996 ஆண்டு ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஒரு சிறிய ப்ராடெக்ட் நிறுவனம் தற்போது மாபெரும் வர்த்தகம் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது.
ZOHO நிறுவனத்தின் ஆபீஸ் சூட் பல கோடி சிறிய வர்த்தகங்களுக்கு பெரிய அளவிலான நிர்வாக மேம்பாடுகளை செய்ய உதவியது மட்டும் அல்லாமல் மலிவான விலையில் சேவை அளிக்கும் காரணத்தால் பல வாடிக்கையாளர்கள் நிர்வாக பணிகளுக்காக பல மில்லியன் டாலர்களை சேமிக்க வழிவகை செய்துள்ளது ZOHO.

இந்த நிலையில் ZOHO நிறுவனம் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டியுள்ளதாக டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டு அசத்தியுள்ளது. இந்த பதிவில் உங்களில் பலர் உங்கள் வணிகத்திற்கு எங்களை நம்பியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் #100 மில்லியன் வலுவான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
ZOHO நிறுவனம் ஒரு பூட்ஸ்டிராப்டு நிறுவனம், ஆதாவது தனது வர்த்தக வளர்ச்சிக்காக வெளியில் இருந்து முதலீட்டை திரட்டாமல் தனது வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தை பயன்படுத்தி மட்டுமே விரிவாக்கம் மேம்பாடுகளை செய்வது. இன்றைய வேகமாக வர்த்தக காலக்கட்டத்தில் இத்தகைய நிலையை அடைவது மிகவும் கடினமான ஒன்று.
இதேபோல் இந்தியாவில் இருந்து SAAS நிறுவனம் உலக நாடுகளில் வர்த்தகம் செய்து வெற்றி காணுவது என்பது மிகவும் கடினமாக ஒரு விஷயம். இதை தான் ZOHO செய்துள்ளது, ZOHO-வின் வெற்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து SAAS நிறுவனங்களுக்கும் ஒரு இன்ஸ்பரேஷன் ஆகும்.
ZOHO கடந்து வந்த பாதை
1996 - அட்வென்ட்நெட் இன்க் ஆக துவங்கப்பட்டது
2008 - 1 மில்லியன் யூசர்களை தாண்டியது
2009 - அட்வென்ட்நெட் ஜோஹோ என மறுபெயரிடப்பட்டது
2015 - 15 மில்லியன் யூசர்களை தாண்டியது
2016 - 20 மில்லியன் யூசர்களை தாண்டியது
2018 - 30 மில்லியன் யூசர்களை தாண்டியது
2019 - 50 மில்லியன் யூசர்களை தாண்டியது
2020 - 60 மில்லியன் யூசர்களை தாண்டியது
2021 - 25வது ஆண்டு நிறைவு & 1 பில்லியன் டாலர் வருவாய் மைல்கல் சாதனையை எட்டியது
2023 - நேற்று 100 மில்லியன் யூசர்களை கடந்தது
இன்று, Zoho உலகளவில் 150க்கும் அதிகமான நாடுகளில் 7,00,000 அதிகமான வர்த்தகங்களுக்கு சேவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications