இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான ஜோஹோ செயல்பட்டு வருகிறது. அண்மை காலமாக இந்தியாவில் ஜோஹோ நிறுவன தயாரிப்புகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பலரும் தாங்கள் ஜோஹோ மெயிலை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக அண்மையில் அறிவித்தனர். வாட்ஸ் அப் போலவே ஜோஹோ உருவாக்கிய அரட்டை செயலி கடந்த மாதம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக இந்தியர்கள் பலரும் அரட்டை செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும், ஜோஹோவின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிட கூடிய பதிவு லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். ஜோஹோவை பொறுத்தவரை ஊழியர்களுக்கு நிறுவன பங்கில் ஒரு பகுதி, சம்பளம், போனஸ் என வாரி வழங்குகிறது. பலரும் எப்படியாவது இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என எண்ணுகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு ஜோஹோவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோவின் ஃப்ளாக்ஷிப் இமெயில் சேவையான ஜோஹோ மெயில் ஆண்டுக்கு 100 மில்லியன் வருவாய் என்பதை நெருங்கி விட்டதாகவும் இதன் 70 சதவீத வணிகம் என்பது இந்தியாவிற்கு வெளியில் தான் நடக்கிறது என்றும் பதிவு செய்திருந்தார்.
உலகிலேயே பாதுகாப்பான ஈமெயில் ப்ரொவைடராக ஜோஹோ மெயில் மாறி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்தியாவை பெருமைப்படுத்துகிறோம் எங்களின் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியடைய செய்கிறோம் என குறிப்பிட்டு இருக்கும் ஸ்ரீதர் தங்களின் anti spam system எவ்வாறு செயல்படுகிறது இதன் நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் உறுதி செய்யும் படத்தையும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோஹோ மெயில் malware மற்றும் Phishingh mailகளை 99% பிளாக் செய்வதாகவும் இதன் விபி ஸ்பேம் சர்டிபிகேஷன் மதிப்பு 99.329 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு , ஜோஹோ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் தானே தனிப்பட்ட முறையில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும், மிகச்சிறந்த வலுவான கணித திறன் கொண்ட நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நிறுவனத்தில் என்னுடைய பெரும்பாலான வேலை என்பது தொழில்நுட்ப பாதையை கண்டறிவதாக தான் இருந்திருக்கிறது, எங்களுக்கு தற்போது கணிதத்தில் மிகச்சிறந்த திறன் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள் உங்களுக்கு அந்த திறன் இருந்தால் எனக்கே நேரடியாக மெசேஜ் அனுப்புங்கள் என கூறியிருக்கிறார். கணித சமன்பாடுகளை கண்டால் உங்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் வேலைவாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications