இந்தியாவில் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அதிகளவில் கொண்டுள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை எப்போதும் டாப் 3 இடங்களுக்குள் இருக்கும்.
அப்படித் தமிழ்நாட்டில் பூட்ஸ்டார்ப் முறையில் ஒரு படியாக வளர்ந்து இன்று மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக நிற்கும் ZOHO நிறுவனம் SAAS பிரிவில் முன்னோடியாக இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் உடன் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது ZOHO.

ஒரு நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து டெக் சேவைகளையும் மலிவான கட்டணத்தில் வழங்கும் காரணத்தால் உலகளவில் வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் கொண்டு உள்ளது ZOHO. இந்த நிறுவனம் நினைத்தால் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ-வில் உயரமான கட்டிடத்தில் தனது அலுவலகத்தை அமைக்க முடியும்...
ஆனால் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சென்னையைத் தாண்டி தமிழ்நாட்டில் 2ஆம் தர நகரங்களில் அடுத்தடுத்து அலுவலகத்தைத் திறந்து வருகிறார். இவரின் செயல்பாடுகளால் கிராமப்புற மாணவர்களுக்குப் பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது.
இப்படி ஜோஹோ திறந்துள்ள அலுவலகங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டுக் கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் கார்ப்ரேட் கலாச்சாரத்தை மொத்தமாக உடைத்துள்ளார் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. ஒவ்வொரு அலுவலகமும் எப்படியிருக்குன்னு நீங்களே பாருங்கள்.
செட்டிநாடு ஸ்டைலில் கட்டப்பட்டுள்ள ஜோஹோ காரைக்குடி, கோட்டையூர் அலுவலகம்.

தூங்காநகரமான மதுரையில் சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஜோஹோ அலுவலகம்.

ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தற்போது வசித்து வரும் திருநெல்வேலி மத்தளம் பாறை அலுவலகம்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தருவை கிராமத்தில் இருக்கும் ZOHO அலுவலகம்.

திருநெல்வேலியில் தனியாகக் கட்டப்பட்டு வரும் ZOHO அலுவலகம்.

சென்னையில் ஏற்கனவே இருக்கும் ஜோஹோ அலுவலகத்திற்கு அருகில் நார்த் பிளாசா, லேக் வியூவ் என்ற இரு பிரம்மாண்டமான மேற்கத்திய கலை வடிவத்தில் கட்டப்பட்டு வருகிறது ZOHO.

கோவையில் ஜோஹோ தனது புதிய அலுவலகத்தைக் காரணம்பேட்டை அருகே தொடங்கவுள்ளது. இது ஆரம்பத்தில் 500 பணியாற்றும் அலுவலகமாகத் துவங்கப்பட்டு 1200 பேர் வரையில் அதிகரிக்கப்படும். இதேபோல் திருப்பூரிலும் ஜோஹோ அலுவலகம் கட்டப்பட உள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்பைக் கொடுப்பதை முக்கியக் கடைமையாகக் கருதும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தற்போது சென்னையைத் தாண்டி சிறு நகரங்களில் அடுத்தடுத்து அலுவலகத்தைத் திறந்து வருகிறார்.
கடந்த 3 வருடமாகப் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2ஆம் தர நகரங்களுக்குச் சென்று வருகிறது, ஆனால் இதற்கு விதை போட்டது ஸ்ரீதர் வேம்பு தான். கொரோனா தொற்று துவங்கும் போதே தனது சென்னை சிஇஓ அலுவலகத்தை, ஸ்ரீதர் வேம்பு பிறந்து வளர்ந்த தென்காசி மாவட்டத்திற்கு மாற்றினார்.
தென்காசியில் ஸ்ரீதர் வேம்பு ஆடம்பர வாழ்க்கைமுறையை மேற்கொள்ளாமல் எளிமையான இயற்கையோடு நெருங்கி வாழ்ந்து வருகிறார். பல நேரம் செருப்பு கூட இல்லாமல் நடக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளார் ZOHO சிஇஓ மற்றும் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications