தமிழ்நாட்டின் மிக முக்கியமான SAAS டெக் நிறுவனமான சோஹோ சமீபத்தில மதுரை கப்பலூர் பகுதியில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இந்த அலுவலகத்தின் போட்டோ தான் இப்போது இணைய வாசிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது மறக்க முடியாது.
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மதுரைக்கு எவ்விதமான முதலீடும் கிடைக்காத நிலையில், மதுரைக்கு வந்த சோஹோ அலுவலகம் இளம் தலைமுறையினருக்கு இதமாய் இருந்தது. இந்த நிலையில் தற்போது சோஹோ-வின் புதிய திருநெல்வேலி அலுவலகம் போட்டோ வெளியாகியுள்ளது.

இது வீடா, ஆபீஸா என குழப்பம் ஏற்படும் அளவுக்கு Zoho-வின் புதிய திருநெல்வேலி அலுவலகம் வடிவமைக்கப்பட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. zoho ஆரம்பம் முதல் தனது அலுவலகங்களை ஒரு அடையாள சின்னமாகவே சித்தரித்து உருவாக்கி வருகிறது.

ZOHO-வின் சென்னை தலைமை அலுவலகமும் வித்தியாமான வடிவத்தில் டம்ளர் போல் இருக்கும். தற்போது சென்னை Estancia IT Park-ல் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகமும் ஐரோப்பிய ஸ்டைலில் அரண்மனை போல் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்-க்கு அடுத்தது அதிக முதலீட்டையும், வேகமாக தொழிற்சாலைகளையும் ஈர்க்கும் நிறுவனமாக இருக்கும் திருநெல்வேலியில் ZOHO தனது புதிய அலுவலகத்தை வெளிப்புறத்தை வீட்டை போலவே வடிவமைத்துள்ளது.

அலுவலகத்திற்குள்ளேயும் மர வேலைப்பாடுகள் அதிகம் கொண்டு பாரம்பரிய முறையிலான டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உயரமான டாப்பா டாப்பாவான அலுவலகத்தை பார்த்து போரடித்து போன பலருக்கு இத்தகைய அலுவலகம் அதிகளவில் கவர்ந்துள்ளது. போட்டோவை பார்த்துவிட்டு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications