கும்பகோணம் என்றாலே அங்கே இருக்கும் கோயில்களும் , கும்பகோணம் டிகிரி காபியும் தான் நம் நினைவுக்கு வரும். கூடிய விரைவில் கும்பகோணத்தின் அடையாளமே மாற போகுது. டெல்டா மாவட்டங்களின் ஐடி மையமாக கும்பகோணம் மாறப் போகிறது.
பொதுவாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஐடி வேலை என்றாலே சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் இனி அந்த நிலைமை கிடையாது. தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் ஐடி வேலைகளை உருவாக்கும் வகையில் டைடல் பார்க்குகளை அமைத்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே அந்த மாவட்ட இளைஞர்களுக்கான ஐடி வேலைகள் கிடைக்கும்.

இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஐடி சேவை நிறுவனமான சோஹோ நிறுவனம் கும்பகோணத்தில் மிகப்பெரிய ஒரு ஐடி பார்க்கை அமைக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவில் ஐடி சேவையில் முன்னணி நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புக்கு சொந்தமான சோஹோ நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அண்மையில் கூட மத்திய அமைச்சர்கள் பலரும் ஜிமெயிலுக்கு மாற்றாக சோஹோ மெயிலை பயன்படுத்த தொடங்கினர். வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக சோஹோவின் அரட்டை செயலியின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. சோஹோ நிறுவனத்தை பொறுத்தவரை பெரிய நகரங்களை விட சிறு நகரங்களில் அலுவலகங்களை அமைத்து அங்கிருக்கும் திறன்மிகு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதில் தீவிரம் காட்டுகிறது.
அந்த வகையில் சோஹோ நிறுவனம் கும்பகோணத்தில் ஐடி பார்க்கினை அமைக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டெல்டாவின் ஐடி மையமாக கும்பகோணம் கூடிய விரைவில் உறுவாக இருக்கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் ஐடி பூங்காவை அமைப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த ஐடி பூங்கா அமைக்கப்படும் பட்சத்தில் கும்பகோணம் ,மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏற்கனவே துபாய் அடிப்படையாகக் கொண்ட டெக் பாட் என்ற நிறுவனம் கும்பகோணத்தில் தன்னுடைய ஐடி நிறுவனத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது சோஹோ நிறுவனமும் அங்கே பெரிய ஐடி பூங்காவை அமைக்க முன் வந்திருக்கிறது.
இது கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய பொங்கல் பரிசாக மாறியிருக்கிறது. சோஹோ நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய சோஹோ ஸ்கூல்ஸ் ஆப் லேர்னிங் என்ற பயிற்சி மையத்தை கும்பகோணத்தில் நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான் சோஹோ நிறுவனம் தங்களுடைய சோஹோ ஸ்கூல்ஸ் ஆப் லேர்னிங் வகுப்புகளை திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்திற்கு விரிவாக்கம் செய்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications