இந்திய பணக்கார பட்டியலில் இருக்கும் பெரும்பாலான ஆண் மற்றும் பெண் பில்லியனர்கள் அனைவரும் குடும்ப வர்த்தகம், குடும்பச் சொத்துக்கள் உடன் இடம்பெற்றவர்கள். சொந்தமாக வர்த்தகத்தைத் துவங்கி பில்லியனர் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்தோர் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் குறிப்பாகப் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்தியாவில் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகத் தற்போது சுயமாகப் பில்லியனரானோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இப்படிப் பெண்கள் பட்டியலில் புதிதாக இணைந்தவர் தான் ராதா வேம்பு.. யார் இவர்..?
பால்குனி நாயர்
இந்தியாவில் சுயமாகப் பில்லியனர் நிலையை அடைந்த பெண்கள் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் எப்போதும் பயோகான் தலைவர் கிரண் மசூம்தார் ஷா முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது நைகா நிறுவனத்தின் ஐபிஓ மூலம் அதன் தலைவர் பால்குனி நாயர் 5.5 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்தைப் பிடித்தார்.
ராதா வேம்பு
இந்நிலையில் சுயமாகப் பில்லியனர் நிலையை அடைந்த பெண்கள் பட்டியலில் 3வதாகத் தற்போது 1.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இடம்பெற்றுள்ளார் ராதா வேம்பு. யார் இந்த ராதா வேம்பு என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இவருடைய பெயர் அதிகம் பிரபலமானது இல்லை என்பது தான்.
Zoho கார்ப் நிறுவனம்
Zoho Corporation நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் 49 வயதான ராதா வேம்பு ஜோஹோ மெயில் சேவையின் ப்ராடெக் மேனேஜர் ஆக உள்ளார். Zoho தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பிரபலமான நிறுவனம். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 12 நாடுகளில் அலுவலகங்களை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
ஸ்ரீதர் வேம்பு
ராதா வேம்பு ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பை முடித்தவர். Zoho நிறுவனத்தின் நிறுவிய ஸ்ரீதர் வேம்பு, ராதா வேம்புவின் சசோதரர் ஆவார். திருமணமாகி சென்னையில் வசித்து வரும் ராதா வேம்பு வெளியுலகில் பெரிய அளவில் பிரபலம் இல்லை, சமுக வலைத்தளத்தில் கூட அவர் இல்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications