zoho நிறுவனம் 1996ம் வருடம் ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்டது. இது வணிக நிறுவனங்களை கையாள தேவைப்படும் சாப்ட்வேர்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.
ஜோஹோ சாப்ட்வேரினை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, சென்னை ஐஐடியில் படித்தவர். அதன் பின்னர் அமெரிக்காவில் ஆராய்ச்சி பட்டம் படித்தவர். ஆரம்பத்தில் அமெரிக்காவில் பணி புரிந்த ஸ்ரீதர் வேம்பு, சென்னை திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்றும் நினைத்தவர், அட்வன்ட் நெட் என்ற நிறுவனத்தினை தொடங்கினார். இது தற்போது ஜோஹோ நிறுவனமாக மாறியிருக்கிறது.
சாப்ட்வேர் வணிகம்
இன்று உலகம் முழுவதும் தனது சாப்ட்வேரினை விநியோகித்து வருகின்றது. தற்போது உலகம் முழுக்க மந்த நிலை நிலவி வரும் நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வருவாயினை எட்டியுள்ளது. இது தொடர்ந்து தனது சேவையினை பல்வேறு வகையான தனிப்பட்ட பிரிவுகளாக பிரித்து செய்து வருகின்றது.
பில்லியன் டாலர் நிறுவனம்
இந்தியாவில் பில்லியன் டாலர் தயாரிப்பு நிறுவனத்தை யாரும் உருவாக்கவில்லை என்று ஜோஹோவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
நாங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கினோம். இது ஒரு சாதாரண தயாரிப்பு. அதன் மூலம் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.
வலிமையான பயணம்
தொடர்ந்து அதிக திறனை உருவாக்க நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்தோம். இதனை இந்த அளவுக்கு உருவாக்க முடியும் என, நம் சொந்த மக்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அதன் பயணம் மிக வலிமையானது என ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
மெதுவான வளர்ச்சி
எங்கள் பயணம் முழுவதும் எங்களுடன் இருந்த மூத்த மேலாளர்களிடம் கேட்டால், நாங்கள் பில்லியன் டாலர் நிறுவனமாக இருப்போம் என அவர்கள் நம்ப மாட்டார்கள் . ஏனெனில் இந்தியாவில் யாரும் பில்லியன் டாலர் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவில்லை. அது அவர்களுக்கு தெரியாது. இது சாத்தியமானது தான். நாங்கள் மெதுவாகவும் சீராகவும் செல்ல வேண்டியிருந்தது என வேம்பு கூறினார்.
பணத்தை சேமிக்க உதவும்
நடப்பு ஆண்டில் நிறுவனம் மெதுவாக வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இது கடந்த ஆண்டு நிறுவனம் பலவகையான பிரிவுகளாக பிரித்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை சேமிக்க உதவும்.
மலிவு விலையில் சலுகை
மிகவும் மலிவு விலையில் மிக தரமான சலுகைகளை வழங்குவதன் மூலம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய நினைக்கிறோம் என்று ஜோஹோ தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயனர்களுக்கு வேகமான நெட்வொர்க்குகளை வழங்க அடுத்த 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் 100 நெட்வொர்க் PoPகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜோஹோ நிறுவனம் கூறியுள்ளது. பிளாக்செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களுக்கு இரட்டிப்பு முதலீடு செய்வதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
செலவு மூன்று மடங்கு
R&D-க்காக தனது மார்க்கெட்டிங் செலவை விட மூன்று மடங்கு அதிகம் செலவிட்டுள்ளது. இதன் மூலம் மூன்று ஆண்டுகளில் 25 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.
2021ல் ஆண்டு அடிப்படையில் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 77% அதிகரித்துள்ளது.
பல மில்லியன் பயனர்கள்
இது தற்போது 160-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50,000 நிறுவனங்களை ஆதரிக்கிறது. வரும் ஆண்டுகளிலும் நிறுவனம் R&D சேவைகளில் கவனம் செலுத்தும். உலகம் முழுவதும் 80 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications