மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக ஜோஹோ (Zoho) நிறுவனம் களமிறக்கிய 'அரட்டை' (Arattai) செயலி, தற்போது தரவரிசையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. உலக அளவில் மெசேஜ் அனுப்பும் செயலிகளில் வாட்ஸ்அப் தான் 'பாஸ்' ஆக இருக்கிறது. அதற்குப் போட்டியாக ஜோஹோ நிறுவனம் கொண்டு வந்த அரட்டை செயலிக்கு கடந்த சில வாரங்களாகக் கடுமையான சோதனை ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே முதல் இடத்தைப் பிடித்து அசத்திய இந்த அரட்டை செயலி, ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தற்போது முதல் 100 செயலிகள் பட்டியலை விட்டு வெளியேறிவிட்டது.

அதன்படி, கூகுள் பிளே ஸ்டோரில் அரட்டை செயலி 105-வது இடத்திலும், ஆப் ஸ்டோரில் 123-வது இடத்திலும் வந்துவிட்டது. இந்த திடீர் சரிவு, இந்தியச் சந்தையில் வாட்ஸ்அப்பின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு பெரிய சவால் என்பதைக் காட்டுகிறது.
இந்த செயலியின் பயன்பாட்டைப் பார்க்கும்போதே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து விட்டதை தெளிவாக பார்க்க முடிகிறது. செப்டம்பர் மாதம் 26.3 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தார்கள். ஆனால், அக்டோபர் 2025-ல் அது திடீரெனப் பெரிய அளவில் உயர்ந்து, 1.38 கோடி பதிவிறக்கங்களைத் தொட்டது. பிரதமர் மோடியின் 'இந்தியத் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்' என்ற வேண்டுகோளும், மத்திய அமைச்சர்கள் சிலர் இதைப் பயன்படுத்தச் சொன்னதும் இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால், இந்தச் சூடு நீண்ட நாள் நீடிக்கவில்லை. நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, வெறும் 1,95,519 பதிவிறக்கங்கள் மட்டுமே நடந்துள்ளன. அதாவது, மக்கள் மத்தியில் இருந்த பரபரப்பு குறைய, பதிவிறக்கமும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.
கடந்த 2021-ல் வாட்ஸ்அப்பின் தனிநபர் தகவல் பாதுகாப்புப் பிரச்சனை எழுந்தபோதுதான் 'அரட்டை' தொடங்கப்பட்டது. இந்தப் புதிய செயலியின் முக்கிய பலமே, பயனர்களின் தகவல் இந்தியாவில் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்பதுதான். வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் முழுக்க முழுக்கப் பாதுகாப்பானவை என்றும் ஜோஹோ சொல்கிறது.
ஆனால், சாதாரண மெசேஜ்களைப் பாதுகாக்கும் முக்கியமான 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்' வசதி இன்னும் முழுமையாக வரவில்லை. (ஆனால், வாட்ஸ்அப்பில் அனைத்து மெசேஜ் மற்றும் கால்களுக்கும் இந்த வசதி ஏற்கனவே உள்ளது.)
திடீரெனப் பயனர்கள் அதிகரித்தபோது, அதற்கான தொழில்நுட்ப வசதிகளை வேகமாக அதிகரிக்க முடியவில்லை என்று ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு முன்பு கூறியிருந்தார். இருந்தாலும், இப்போது சவால்களைச் சமாளித்து, அடுத்தடுத்துச் செயலியின் வசதிகளை மேம்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தியாவில் வாட்ஸ்அப்பின் ஆதிக்கத்தை அசைப்பது என்பது ஒரு பெரிய மலையேறும் முயற்சி போன்றது. வாட்ஸ்அப் என்பது வெறும் மெசேஜிங் செயலி மட்டுமல்ல. சிறிய வியாபாரிகள் தங்கள் வியாபாரம் முழுவதையும் இதன் மூலமே நடத்துகிறார்கள். பல அரசாங்க அமைப்புகளும் இதைப் பயன்படுத்துகின்றன.
இதற்கு முன்பு, பார்தி ஏர்டெல் குடும்பத்தைச் சேர்ந்தவரால் 2012-ல் தொடங்கப்பட்ட 'ஹைக்' (Hike) போன்ற இந்தியச் செயலிகள் கூட 10 கோடி பயனர்களை ஈர்த்தும், கடைசியில் 2021-ல் மூடப்பட்டன. எனவே, ஜோஹோவின் 'அரட்டை' செயலி, இந்தச் சந்தையில் நிலைத்து நிற்பதற்கு இன்னும் பல முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications