இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக மிக வேகமாக சோஹோ நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக இளைஞர்கள் என்ன மாதிரியான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், இந்தியா எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
அண்மையில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டிருக்கக் கூடிய எக்ஸ் பதிவு சமூக வலைதள வாசிகள் மத்தியில் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. அதாவது தேர்வுகளை வைத்து ஒருவரின் திறமையை மதிப்பிட்டு விட முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஒரு நபர் எவ்வளவு திறமையானவர் என்பதை கண்டுபிடிப்பதற்கான வழி தேர்வுகளும் அதில் கிடைக்கும் மதிப்பெண்களும் கிடையாது என்பதே அவர் முன்வைக்கும் வாதம்.

மெடா நிறுவனத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு தலைவராக பணியாற்றிய யான்லீ கன் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவினை ஷேர் செய்து ஸ்ரீதர் வேம்பு இந்த கருத்தினை வெளியிட்டு இருக்கிறார். யான் லீ கன் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் பிரெஞ்சு கணிதவியலாளர் 2022 ஆம் ஆண்டில் கணிதத்தில் ஃபீல்டு மெடலிஸ்டுமான ஹுகோ டுமினில் கோபின் தான் கணிதப் போட்டியில் ஒருபோதும் பங்கேற்கவில்லை என்றும் அதில் மிக மோசமாக இருந்ததாகவும் என்னிடம் கூறியிருக்கிறார். அதாவது புதுமையான கணிதத்திற்கு படைப்பாற்றல், உள்ளுணர்வு உள்ளிட்டவை தேவை என்றும் குறிப்பிடுகிறார்.
உலகம் முழுவதுமே தற்போது மேக்ஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பிரபலமாக இருக்கின்றன. மேக்ஸ் ஒலிம்பியாட் என்ற கணித போட்டிகளில் நல்ல செயல் திறன் கொண்டிருப்பது என்பது விரைவாக சிக்கல் தீர்க்கும் திறன்களை மட்டுமே காட்டுகிறது ஆனால் அதை தான் தற்போது ஏஐ தொழில்நுட்பமே செய்து விடுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். கணிதத்தை பொருத்தவரை முக்கியமான விஷயம் கேள்விகளுக்கு பதிலளிப்பது அல்ல சரியான கேள்விகளை கேட்பது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனை குறிப்பிட்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு தேர்வுகள் ஒரு நபரின் தேர்வை எதிர்கொள்ளும் திறனை அளவிடுகின்றன. நேர்காணல்கள் அவரின் நேர்காணல் திறன்களை அளவிடுகின்றன. ஆனால் இந்த இரண்டு விஷயங்களை தாண்டி இந்த இரண்டும் வேறு எதற்குமே பயன்படுவது கிடையாது என்கிறார். அதாவது தேர்வுகளும் நேர்காணல்களும் நிஜ உலகில் திறமையோடு செயல்படுவதற்கான எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகிறார்.
ஒரு நபர் எவ்வளவு திறமையானவர் என்பதை அவருடைய தேர்வு மதிப்பெண்களோ நேர்காண மதிப்பீடுகளோ வைத்து அளவிட முடியாது என்பதே அவர் முன் வைக்கும் கருத்தும். உலக அளவில் வேலைவாய்ப்பு சந்தையே பெரிய மாற்றம் கண்டுள்ளது. பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் பெரிய பெரிய படிப்புகளை முடித்தவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. ஏஐ வருகை, ஆட்டோமேஷன் ஆகியப்வை பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டன.
கல்லூரிக்கு சென்று பட்டம் வாங்குவதெல்லாம், வேலை கிடைக்க உதவுவதில்லை என்ற கருத்து பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்புவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications