பெரும்பாலான இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைக்க பெரிய பெருநகரங்களை நோக்கி செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் ஒரு இந்திய நிறுவனம் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளது. ஆம் தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் ஜோஹோ (Zoho) நிறுவனம் ஒரு புதிய அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வளாகம் இப்போது அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சென்னையில் உள்ள ஜோஹோவின் தலைமையகத்திலிருந்து 623 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் இங்குள்ள மக்கள் தொகை எண்ணிக்கை வெறும் 35 லட்சம் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மிகவும் லாபகரமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகவும் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜோஹோ நிறுவனம் இங்கு ஒரு புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது.

மேலும் இந்த அலுவலகம் பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான IT தொழில்நுட்ப அலுவலகங்களைப் போல கண்ணாடிப் பலகைகளைக் கொண்ட வானளாவிய கட்டிடம் அல்ல. ஜோஹோவின் திருநெல்வேலி அலுவலகம் தென்னிந்தியாவின் பாரம்பரிய பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அலுவலகம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெகு தொலைவில் உள்ளது. மேலும் இந்த அலுவலகத்தைச் சுற்றி ஏராளமான பசுமையான இடங்கள் உள்ளன. உட்புறத்தில், பார்ப்பதற்கு இந்த அலுவலகம் பிற IT பணியிடம் போல் தெரிகிறது. வசதியான மேசைகள் மற்றும் சாய்வு நாற்காலிகள், அத்துடன் மரத்தால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய அலுவலகத்தில் டேட்டா அனாலிடிக்ஸ் ப்ராடக்ட்களில் பணிபுரியும் கோடர்கள் மற்றும் இன்ஜினியரிங் மேனேஜர்ஸ் பணி புரிவார்கள் என்று கூறப்படுகிறது. பெரிய நகரத்திற்கு வெளியில் திறக்கப்படும் முதல் அலுவலகம் இது இல்லை. இன்னும் 10 புதிய அலுவலகத்தை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் திறக்க இருப்பதாக ஜோஹோ நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அதன்படி 500 முதல் 1000 பேர் இந்த இடங்களில் பணிபுரிவார்கள் என்றும் கூறப்படுகிறது. Zoho ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தென்காசியிலும், ஆந்திராவில் ரேணிகுண்டாவிலும் அலுவலகங்களை நடத்தி வருகிறது.
பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இந்த நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் அலுவலகங்களை திறப்பதற்கு பதிலாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இது போன்ற அலுவலகங்களை திறப்பது படித்து முடித்து வரும் பட்டதாரியானாலும் சரி, வேலை செய்வதற்காக பிற ஊர்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து சென்னை பெங்களூர் போன்ற நகரங்களை நோக்கி படையெடுக்கும் பல சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு இதுபோன்ற அலுவலகங்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பணிக்காக தங்கள் சொந்த ஊர்களை விட்டு செல்லும் பட்டதாரிகளுக்கு ஜோஹோ நிறுவனத்தின் இந்த முயற்சி உதவிகரமான ஒன்றாக மாறியுள்ளது.
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் மனிதராக நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்று 9,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நிறுவியவர் சைக்கிள் ஆட்டோ என அவ்வப்போது தனது பயணங்களை மேற்கொண்டு சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த அளவு எளிமையான வாழ்க்கை வாழும் மனிதர் இவர்.
தனது நற்குணங்களுக்காக பெயர் பெற்ற இவரின் இந்த முயற்சி பல பட்டதாரிகள் இடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பெருநகரங்கள் அல்லாத நகரங்களிலும் உள்ள பட்டதாரிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதற்கான நிறுவனத்தின் முயற்சி பல தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications