தமிழ்நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான Zoho Corporation, தலைமை பொறுப்புகளில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக, இந்நிறுவனத்தின் அடையாளமாகவும், சிஇஓ-வாகவும் இருந்த ஸ்ரீதர் வேம்பு தனது பதவியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அதேவேளையில் வியக்கவும் வைத்துள்ளது. வியக்க ஒரு முக்கியமான காரணம் உண்டு.
சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் சோஹோ கார்ப்ரேஷன் நிறுவனம், இனி வரும் காலத்தில் SAAS பிரிவை தாண்டி ஏஐ மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தலைமைத்துவத்தை மாற்றியுள்ளது.

உலகில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்ந்து மாறிவரும் நிலையில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சமீபத்திய வளர்ச்சி காரணமாக, இந்த மாற்றம் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது என்று இந்நிறுவனம் கருதுகிறது.
இந்த நிலையில் Zoho Corp இன் தற்போதைய CEO ஸ்ரீதர் வேம்பு தனது பதவியில் இருந்து விலகி, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த பதவியில், அவர் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார். இதன் மூலம் Zoho நிறுவனம் இன்னோவேஷனிலஸ் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வார் ஸ்ரீதர் வேம்பு.
இதேவேளைில் Zoho இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய குரூப் சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், Zoho US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார், மேலும் ராஜேஷ் கணேசன் மற்றும் மணி வேம்பு முறையே ManageEngine மற்றும் Zoho.com பிரிவுகளை தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தனது முயற்சிகளின் புதிய அத்தியாயத்தை டிவிட்டர் பதிவின் மூலம் மக்களுக்கு தெரிவித்த நிலையில் "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சவால்களை எவ்வளவு சிறப்பாக சமாளிக்கிறோமோ, அதை பொறுத்தே நிறுவனத்தின் எதிர்காலம் முழுவதும் உள்ளது" என்று கூறினார்.
ஸ்ரீதர் வேம்பு Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்ற பின்பும் தனது கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications