இந்தியாவில் கூகுள் மைக்ரோசாப்ட் போன்ற வெளிநாட்டு டெக் நிறுவனங்களின் சேவைகளை நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த சூழலில் அதற்கு மாற்றாக இந்தியாவிற்கான ஒரு டெக் நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் படிப்படியாக உருவெடுத்து வருகிறது .
வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக ஜோஹோ கொண்டு வந்த அரட்டை செயலி சமீபகாலமாக மக்களிடையே பெரிய அளவில் புகழ்பெற்றது . அதேபோல மத்திய அமைச்சர்கள் பலரும் பாரம்பரியமான gmail உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக ஜொஹோ மெயிலை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த டெக் சேவைகளை இந்தியர்கள் பரவலாக பயன்படுத்த வேண்டும் என சமூக வலைத்தளங்களிலும் பலரும் பரிந்துரைக்கின்றனர்.

இதன் மூலம் தற்போது இந்திய அளவில் பேசப்படக்கூடிய டிரெண்டான ஒரு நபராக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மாறியிருக்கிறார். ஸ்ரீதர் வேம்புவை பொருத்தவரை தன்னுடைய சமூக வலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதாரம், டெக் துறை குறித்து பதிவு செய்து வருபவர் . அவர் வெளிநாடு சென்று இருக்கக்கூடிய இந்தியர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவுரையை வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திறன் மிகு ஊழியர்கள் வருவது வேலை செய்வது, செட்டிலாவது ஆகியவை தற்போது கடினமாகி இருக்கின்றன. டிரம்ப் நிர்வாகம் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியர்கள் அமெரிக்கா செல்வதும், ஏற்கனவே அமெரிக்கா சென்றவர்கள் அங்கே வேலை செய்வது பெரிய சிக்கலாகி இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் மற்ற நாட்டவர்களை விட இந்தியர்கள் தான் அதிகமாக அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு தருகின்றனர் என்பதை குறிக்கும் ஒரு விளக்கப்படத்தை ஷேர் செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, கீழே இருக்கக்கூடிய விளக்கப் படத்தை பாருங்கள் அதில் காட்டுவதைப் போல பல்வேறு நாடுகளிலும் இந்தியாவை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் தான் அந்த நாட்டிற்கு அதிக அளவிலான நிதி பங்களிப்பை வழங்குகிறார்கள் , இந்தியா எப்போதுமே வெளிநாடுகளுக்கு தன்னுடைய சிறந்த நபர்களை தான் அனுப்பி வைக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
அடுத்த தலைமுறையிலாவது இந்தியா இது போன்ற சிறப்பான நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இந்தியாவிலேயே தக்க வைத்துக் கொள்ளும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கும் அவர் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்ற திறமை மிகு இந்தியர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் .
புலம்பெயர்ந்தோர் பார்வையில் பார்க்கும்போது உங்களை வரவேற்காத இடத்தில் ஏன் நீங்கள் தங்கி இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார். உங்களை பாரத மாதா வரவேற்கிறார் ,தாயகம் திரும்புங்கள், வலுவான வளமான பாரதத்தை உருவாக்குவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார்.
பலரும் ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்தை ஆதரித்திருக்கின்றனர். தற்போது இந்தியா சிறந்த திறமைகளை தக்க வைத்து பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான ஒரு சூழலில் இருக்கிறது , வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப்களுக்கு சாதகமான சூழல் இந்தியாவில் நிலவுவதாக பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ஒரு நபர் இந்தியாவை குளோபல் பவர் ஹவுஸ் ஆக உருவாக்குவதற்கான சரியான சமயம் வந்துவிட்டது, மிகச் சிறந்த வாய்ப்புகள் தற்போது இங்கே இருக்கின்றன தயவுசெய்து தாயகம் திரும்புங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை கட்டி எழுப்புவோம் என கூறியிருக்கிறார். ஒரு நபர் ஸ்ரீதர் வேம்பு போன்ற நபர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் இந்தியாவிற்கு வாருங்கள் உங்களுடைய தயாரிப்புகளை உருவாக்குங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஒரு சிலர் இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் சம்பள வேறுபாடுகள் இருக்கின்றன அவற்றை அவற்றை சரி செய்தால் நிச்சயம் பல்வேறு திறன்மிகு இந்தியர்களும் தாயகத்திற்கு திரும்புவார்கள் என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications